``முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை..'' -தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம்

2 hours ago
ARTICLE AD BOX
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (பிப்ரவரி 5) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வேல்முருகன், “முதலில்  21 வன்னிய போராளிகளுக்கு மணிமண்டபம் திறந்து வைத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது தொகுதியில் (பண்ருட்டி) வேளாண்மை  கல்லூரியோ அல்லது பொறியியல் கல்லூரியோ அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

வேல்முருகன் வேல்முருகன்
ஈரோடு: ``பூத் நிர்வாகிகளின் பெற்றோர்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்'' -நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு

அதன்பிறகு வைக்கோவின் உதவியாளர் பிரசாந்த் கைது என்று நேற்று (பிப்ரவரி 4) தலைப்பு செய்தி வந்தது அது தவறான செய்தி. இங்கு ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாக சில வேலைகளைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவை ஒன்றிய அரசின் அழுத்தத்தால் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது குறித்தும் முதலமைச்சரிடம் விரிவாகப் பேசினேன்” என்று தெரிவித்தார்.

மேலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “முருகன் தமிழ் கடவுள் அங்குதான் இருக்கிறார். அங்கு அவர்கள் வழிபடுவதற்கு எந்த ஒரு தடையும் கூடாது.

வேல்முருகன் வேல்முருகன்

அதேபோல மசூதிக்கு சென்று வழிபடும் மக்கள் அவர்கள் காலம் காலம் பின்பற்றுவதை பின்பற்றலாம். இரு தரப்பு மக்களின் வழிபாடுகளையும் தடுக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article