ARTICLE AD BOX
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில், கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் நினைவு பரிசுகளை தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பில்லாமணி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர். ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் பாலா, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பில்லாமணி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பின்னர், முதல்வரின் பிறந்தநாளையொட்டி ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை, நினைவு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினர். இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் பரமசிவம், கோமதி கணேஷ்பாபு, ஒன்றிய குழு துணைத்தலைவர் மாலதி போஸ்கோ, சாதிக்பாஷா, மாவட்ட நிர்வாகிகள் முருகன், ஜார்ஜ், சந்தவேலூர் சத்யா, அரிகிருஷ்ணன், முனிகிருஷ்ணன், போஸ்கோ, மண்ணூர் சரவணன், ஓவியா முருகன், நகராட்சி நிர்வாகிகள் குமார், ஆறுமுகம், இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திகேயன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post முதல்வர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை appeared first on Dinakaran.