முதல்ல நீங்க வெளியே போங்க.. எலான் மஸ்க்-ன் TESLA சீஇஓ பதவியை பிடுங்கும் முதலீட்டாளர்கள்..!!

16 hours ago
ARTICLE AD BOX
  World

முதல்ல நீங்க வெளியே போங்க.. எலான் மஸ்க்-ன் TESLA சீஇஓ பதவியை பிடுங்கும் முதலீட்டாளர்கள்..!!

World

அமெரிக்கா: எலான் மஸ்கிற்கு சொந்தமான எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் தான் டெஸ்லா. எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் கொடி கட்டி பறந்த டெஸ்லா நிறுவனம் அண்மைக்காலமாக சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக டெஸ்லா தன்னுடைய பிரதான சந்தைகளான ஐரோப்பா மற்றும் சீனாவை இழந்து வருகிறது.

சீனாவில் டெஸ்லாவுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட பிஒய்டி நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு மாறி இருப்பதால் சர்வதேச அளவில் டெஸ்லா கார்களுக்கு போட்டி அதிகரித்துவிட்டது. குறிப்பாக சீனாவின் பிஒய்டி நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக மாறி இருக்கிறது. உலகம் முழுவதும் தன்னுடைய விற்பனையை விரிவாக்கம் செய்து வருகிறது.

முதல்ல நீங்க வெளியே போங்க.. எலான் மஸ்க்-ன் TESLA சீஇஓ பதவியை பிடுங்கும் முதலீட்டாளர்கள்..!!

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். எலான் மஸ்க் டெஸ்லா மட்டுமில்லாமல், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களையும் கவனித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவருக்கு அரசிலும் பல்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக அரசின் செயல் திறனை மேம்படுத்தவும் செலவுகளை குறைக்கவும் உருவாக்கப்பட்ட அரசு செயல் திறன் துறைக்கு எலான் மஸ்க் தான் தலைமை வகிக்கிறார்.

இது போன்ற பணிகள் காரணமாக எலான் மஸ்க்கால் டெஸ்லா நிறுவனத்தின் மீது கவனம் செலுத்த முடியவில்லை என முதலீட்டாளர்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். இதனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என கூறி வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களுக்கு தலைமை பொறுப்பு மற்றும் அரசின் பணிகளிலும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் இவரால் முன்பை போல முழுமையாக டெஸ்லா நிறுவனத்தை கவனித்துக் கொள்ள முடியவில்லை என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை சரிந்து விட்டது, டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மூலதனமும் சரிந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த நிறுவனத்தை சரியாக வழி நடத்தும் ஒரு தலைவர் தேவை என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த சவால் மிகுந்த காலகட்டத்தில் டெஸ்லா நிறுவனத்தை சரியாக வழிநடத்துவதற்கு எலான் மஸ்கால் முடியவில்லை என்றும் மற்ற பணிகள் அவரை டெஸ்லா மீது கவனம் செலுத்த முடியாமல் வைத்திருக்கின்றன என்றும் முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டாளர் ராஸ் கெர்பர், நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்றும் புதிதாக அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பலரும் இதே கருத்தை முன் வைப்பதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தற்போது பல்வேறு பணிகள் இருப்பதால் டெஸ்லா குறித்து எலான் மஸ்க் கவலைப்படுவதே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற பணிகளை விடுத்து முழுவதுமாக டெஸ்லாவில் கவனம் செலுத்த வேண்டும் அல்லது வேறு ஒருவரை இந்த பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் இந்த இரண்டும் நடக்கவில்லை என்றால் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியடையும் என அவர் கூறியுள்ளார்.

பல்வேறு முதலீட்டாளர்களும் டெஸ்லா நிறுவனம் தற்போது சரிவடைந்து வருவதால் கணிசமான அளவு பங்குகளை விற்பனை செய்ய தொடங்கி விட்டதாகவும் அவர் கூறுகிறார். டிசம்பர் மாதத்தில் இருந்து டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 800 மில்லியன் டாலர்கள் வரை குறைந்து இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் டெஸ்லா பங்கு மதிப்பு 24 சதவீதம் வரை சரிந்து இருப்பதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச அளவில் மேற்கத்திய நாடுகளில் எல்லாம் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்கள் பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாறாக எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வரக்கூடிய இந்த சூழலில் சந்தையை கைப்பற்ற முடியாமல் டெஸ்லா நிறுவனம் திணறுவதாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இதன் காரணமாகவே டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பும் விற்பனையும் குறைகிறது என்கின்றனர்.

சீன நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது என கூறும் முதலீட்டாளர்கள், எலான் மஸ்கின் சில செயல்பாடுகள் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாக கூறுகின்றனர். ஐரோப்பிய சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை கடந்த இரண்டு மாதங்களில் 45 சதவீதம் சரிவடைந்திருக்கிறதாம்.

ஆனால் ஐரோப்பிய எலக்ட்ரிக் வாகன விற்பனை 31 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது, அதில் டெஸ்லா நிறுவன கார்களின் விற்பனை 45 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. அதாவது தன்னுடைய பிரதான சந்தையான ஐரோப்பாவை டெஸ்லா இழந்துவிட்டது என கூறுகின்றனர். பிரிட்டனில் டெஸ்லா நிறுவன கார்கள் 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 25,852 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 46,000 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

டெஸ்லா நிறுவன கார்களுக்கு மாற்றாக மக்கள் பலரும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் சீனாவின் பிஒய்டி நிறுவன கார்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களில் டெஸ்லா 20 சதவீதமாகவும் பிஒய்டி 15 சதவீதமாகவும் இருந்தது. இதுவே இரண்டாவது காலாண்டில் இரண்டு நிறுவனங்களுமே சமமாக 17 சதவீத கார்களை விற்பனை செய்திருந்தன. நான்காவது காலாண்டில் டெஸ்லா நிறுவன கார்களின் விற்பனை 14 சதவீதமாகவும் பிஒய்டி நிறுவனத்தின் கார்கள் விற்பனை 16 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் தான் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் பதிக்க இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் விலை அதிகமாக இருப்பதால் உடனடியாக அதன் விற்பனை சூடு பிடிக்காது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அடிப்படை மாடல் காரே இந்தியாவில் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

Read Entire Article