“இதுதான் உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு”… பார்த்தாலே நடுங்குதே…. திகிலூட்டும் போட்டோ…!!!

1 day ago
ARTICLE AD BOX

அனகோண்டா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மிகப்பெரிய பாம்பு தான். ஆனால் அனகோண்டாவில் பல இனங்கள் உள்ளன. இந்த அனகோண்டா இனங்களை குறித்து விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேஷனல் ஜியோகிராபிக் குழு எக்குவடாரின் அடர்ந்த காடுகளில் புதிய வகை அனகோண்டா இனத்தை கண்டறிந்துள்ளனர். இதுதான் தற்போது உலகிலேயே மிக பெரிய பாம்பு என புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சியில் பிரையான் ஃப்ரை தலைமையிலான குழு பமேனோ பகுதியில் இந்த வகையான அனகோண்டாவை கண்டறிந்துள்ளனர்.

அதாவது உலகின் மிகப்பெரிய பாம்பு இனங்களில் இவை முதலிடத்தைப் பிடித்துள்ளன. இதன் புதிய அனாகொண்டா, ‘Northern Green Anaconda (Eunectes murinus)’ என பெயரிடப்பட்டுள்ளது. இவை வாதராணி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் 10 நாட்களுக்கு மேல் அந்த காட்டில் உள்ள காட்டுவாழ்  மக்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை வைத்து விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளனர். இதன் அளவு சுமார் 24 அடி நீளம் மற்றும் 550 பவுண்ட்(250 கிலோ) எடை கொண்டது எனக் கூறப்படுகிறது.

பொதுவாக இது போன்ற அனகோண்டாக்கள் வெப்பமண்டல பகுதிகள், சதுப்பு நிலங்கள், மெதுவாக ஓடும் ஓடைகள், ஆறுகள் அருகே காணப்படுகின்றன. இதை ஆமைகள், மீன்கள், மான்கள், சில சமயங்களில் ஜாக்குவார்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இந்த வகையான பாம்பினம் மெதுவாக சொல்லும் ஓடைகள் அருகே விலங்குகளை வேட்டையாட காத்திருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான் காடு இன்னும் எத்தனையோ மர்மங்களை தன்னூள் மறைத்து வைத்திருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

Read Entire Article