முதல் டி20: 10 ஓவர்களில் நியூசி. அபார வெற்றி!

10 hours ago
ARTICLE AD BOX

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20யில் நியூசி. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரரின் முதல் டி20 போட்டி இன்று (மார்ச் 16) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்கள் எடுத்தார்.

நியூசி. பந்துவீச்சில் ஜேகோப் டூபி 4, ஜேமிசன் 3, இஷ் சௌதி 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய நியூசி. அணி 10.1 ஓவர்களில் 92/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக டிம் செய்ஃபர்ட் 44, ஃபின் ஆலன் 29 ரன்கள் எடுத்தார்கள்.

ஜேமிசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2ஆவது டி20 போட்டி மார்ச்.18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

Read Entire Article