‘முதலமைச்சர் ஏற்றதாக சொன்னீர்களே..?’ கனிமொழி எம்.பி.,யிடம் தர்மேந்திர பிரதான் வாக்குவாதம்!

5 hours ago
ARTICLE AD BOX

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்

‘‘இன்று எனக்கு துயரமாக இருக்கிறது. அமைச்சர் பதிலளிக்கும் போது தமிழக அரசாங்கத்தை நாகரீகமற்றவர்கள் என்று கூறியிருக்கிறார். அவைத் தலைவர் அவர்களே , நீங்கள் என் பெயரையும் குறிப்பிட்டீர்கள். நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். உண்மை என்னவென்றால், நான் அமைச்சரை சந்தித்திருக்கிறேன். அது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தான். அந்த சந்திப்பில் மாநில அமைச்சரும் இருந்தார்கள். தேசிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு பிரச்னை இருக்கிறது என்று கூறியிருக்கிறோம். மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், உண்மை என்னவென்று சொன்னால், முதலமைச்சர் அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

தேசிய கல்வி கொள்கையில் உள்ள பிரச்னை காரணமாக, அதை ஒட்டுமொத்த ஏற்க முடியாது, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு மக்கள், இதை ஏற்கமாட்டார்கள். 

முதலமைச்சர் ஏற்றதாக என்னிடம் கூறினார்கள்

கனிமொழி எம்.பி.,யின் பேசிக் கொண்டிருக்கும் போது, குறுக்கிட்டு எழுந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கனிமொழி எம்.பி.,க்கு பதிலளித்தார்.

‘‘என்னுடைய சகோதரி, இரு விசயத்தை குறிப்பிட்டிருந்தார். முதல் விசயம், நான் விமர்சனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு. நான் அதை குறிப்பிட்டிருக்க கூடாது, நான் என் வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என் வார்த்தை யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு வருந்துகிறேன். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, கனிமொழி மற்றொரு விசயத்தை குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கிறேன். கனிமொழி அவர்கள் அமர்ந்து, என் பேச்சை கேட்பார் என்று நம்புகிறேன். அவர்கள் என்னை பார்க்க வரும் போது, பல நேரங்களில் என்னை சந்திக்க வரும் போது, நல்ல தீர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். சில விசயத்தை ஏற்றுக் கொள்ளவதாக என்னிடம் கூறினார்கள். ( கனிமொழி குறுக்கிட்டு பேச முயன்றார். அப்போது அமைச்சர் அதை தடுத்தார்)

நீங்கள் உண்மையை கேட்க துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் விவாதித்ததை முதலமைச்சரிடம் கூறியிருப்பதாகவும், பிஎம்ஸ்ரீ பள்ளியை ஏற்பதாக அவர்கள் தான் என்னிடம் குறிப்பிட்டார்கள். நீங்கள் (கனிமொழி) தான் என்னிடம் கூறினீர்கள். இப்போது மீண்டும் வருகிறீர்கள். இது துரதிஷ்டவசமானது. இன்றும் கூட நான் குறிப்பிடுகிறேன், பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களுக்கு நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு விசயத்தை, கொள்ளை என வரும் போது, தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும்,’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தின் தலைமை ஆசிரியராக உள்ளார். 23 ஆண்டுகளுக்கு மேல் அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய தேர்ந்த அனுபவம் மிக்கவர். இணையத்தின் முழு செயல்பாட்டை கண்காணிப்பதுடன், அனைத்து துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் எழுதுகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்துள்ள இவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர். தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு நிறுவனங்களைத் தொடர்ந்து 2022ல் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். திரைக்கதை எழுதுவது, இசை கேட்பது இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
Read Entire Article