ஒன்றை கால் ஜீன்ஸ்.. ஒரு காலில் பேண்ட்.. இன்னொரு காலில் டவுசர்! இதெல்லாம் டிரெண்டா..

3 hours ago
ARTICLE AD BOX

இன்றைய பேஷன் உலகில் ஏதாவது ஒன்று டிரண்டாகி கொண்டே இருக்கும். அப்படி தற்போது டிரண்டானதுதான் ஒன்றை கால் ஜீன்ஸ். இந்த ஜீனஸை பலரும் வியந்து பார்க்கும் அதே நேரத்தில் பலரும் அதனை விமர்சித்து வருகின்றனர். 

நாம் எல்லாம் ஏதோ டிரண்டாக இருக்கிறது என்று வாங்கினால், நமது பெற்றோர்கள் இதெல்லாம் ஒரு டிரண்டா என்று அலட்சியமாக சொல்லி கடந்து செல்வார்கள். அதேநேரத்தில், டோன்ட் ஜீன்ஸ், அதாவது ஜீனில் அங்கங்கே கிழிந்து இருக்கும். இது ஒரு டிரண்ட். இதனை நாம் வாங்கினால், கிழிந்த பேண்டுக்கு இவ்வளவு ரூபாய் என்றும் பெற்றோர்கள் திட்டுவதுண்டு. அப்படி இருக்கையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒன்றை கால் ஜீன்ஸை தற்போது உருவாக்கி உள்ளனர். 

அது என்ன ஒன்றைக்கால் ஜீன்ஸ் என உங்களுக்கு சந்தோகம் வரலாம். அதாவது முழு ஜீன்ஸ் பார்த்திருப்பீர்கள். அதேசமயம் அரைகால் டவுசரும் ஜீன்ஸில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை இரண்டையும் இணைத்தால் என்ன என்று யோசித்து ஒருவர் கண்டுபிடித்தது தான் இந்த ஒன்றைக் கால் ஜீன்ஸ். அதாவது ஒரு காலுக்கு வழக்கமான பேண்டாக இருக்கும். அதேசமயம் மற்றொரு காலுக்கு டவுசராக இருக்கும். 

மேலும் படிங்க: பயங்கர பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய குழந்தைகள்! வைரலாகும் வீடியோ..

இவ்வளவு விலையா? 

இது வினோதமாகவும் டிரண்டாகவும் தெரியலாம். ஆனால் இதன் விலை கேட்டால் தலை சுற்றும். இந்த ஒன்றைக் கால் ஜீன்ஸ் 440 டாலராம். இந்திய விலைப்படி சுமார் ரூ.38,000 என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் இந்த ஜீன்ஸ் கிடைக்கும். அந்நாட்டை சேர்ந்த கோபர்னி என்ற நிறுவனம் இந்த ஜீன்ஸை விற்று வருவதாக கூறப்படுகிறது. 

பேஷன் பிரபலம் கிறிஸ்டி சாரா 

இந்த ஒன்றை கால் ஜீன்ஸ் குறித்து கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பேஷன் பிரபலமான கிறிஸ்டி சாரா வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவரது கணவர், ஜீன்ஸில் ஏன் ஒரு பக்கம் மிஸ்ஸாகி உள்ளது என வியந்து கேட்கிறார். அதற்கு, கிறிஸ்டி சாரா, மிஸ் எல்லாம் ஆகவில்லை. இது ஒரு டிரண்ட் என கூறுகிறார். பின்னர் அதனை அணிந்த கிறிஸ்டி சாரா, ஒரு காலில் காற்றோட்டம் நன்றாக இருப்பதாகவும் மற்றொரு கால் வெதுவெதுப்பாக இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டார். 

இந்த ஜீன்ஸை பேஷன் கலைஞர்கள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இந்த ஜீன்ஸ் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையும் அமோகமாக இருந்து வருகிறது.  

மேலும் படிங்க: 104 குழந்தைகள், 144 பேரப்பிள்ளைகள், 20 மனைவிகள்-யாரு ராசா நீ? வைரல் செய்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article