ARTICLE AD BOX
முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைவதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
இன்றைய காலகட்டத்தில் முகத்தில் சுருக்கம் என்பது அனைத்து பெண்களிடம் இருக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பலரும் பல விதமான செயற்கை விதமான கிரீம்களை யூஸ் செய்கிறார்கள். இந்நிலையில் இயற்கையான முறையில் வீட்டிலேயே இதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு மற்றும் ரோஜா மொட்டு வெட்டிவேர் கோரைக்கிழங்கு மற்றும் விளாமிச்சு வேர் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் ஆவாரம் பூ இதழ்கள் இவற்றை சம அளவில் எடுத்து, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். சோப்புக்கு பதில் இந்த நலங்கு மாவை தினமும் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். சருமம் சுத்தமடைந்து தேமல் மற்றும் கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் பளபளப்பை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது. தொடர்ந்து ஆவாரம் பூவை பயன்படுத்தி வந்தால் சுருக்கங்களை குறைத்து பளிச்சென்ற சருமத்தை நம்மால் பெற முடியும்.