மீன்குழம்பை நல்லா வாசனையா வைனு சொன்னா.. குழம்புல ஒரு பாட்டில் சென்ட்ட ஊத்திட்டா மேடம்!

21 hours ago
ARTICLE AD BOX

மீன்குழம்பை நல்லா வாசனையா வைனு சொன்னா.. குழம்புல ஒரு பாட்டில் சென்ட்ட ஊத்திட்டா மேடம்!

Memes
oi-Jaya Chitra
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்துள்ளனர் நம் நெட்டிசன்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் மக்களுக்கு வீட்டில் விதவிதமான சாப்பாடு வேண்டும். அப்படி வயிறு நிறைய சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக, வயிறு வலிக்க சிரிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்வதும், அதனைப் பார்த்து ரசிப்பதும் தான். அதனால்தான் ஒவ்வொரு ஞாயிறும் வீட்டு சமையலையைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களிலும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்கள் நிரம்பி வழிகின்றன.

sunday food memes

ஆனால் இந்த வாரம் வயிறாற அசைவச் சாப்பாடு சாப்பிட்டவர்களைவிட, அசைவம் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள்தான் அதிகம் போல. அதனால்தான், தங்களது ஆதங்கங்களையெல்லாம், "இஞ்சி பூண்டு பேஸ்ட்லாம் ரெடி பண்ணினா மேடம்.. பிரியாணினு நா ஆசையா இருந்தேன்.. ஆனா இப்டி ஏமாத்திட்டா!" என்பது மாதிரியான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர்.

கூடவே, "மீன்குழம்பை நல்லா வாசனையா வைனு சொன்னா.. குழம்புல ஒரு பாட்டில் சென்ட்ட ஊத்திட்டா மேடம்!" என்றும், "வேண்டியவர்கள் வீட்டிற்கு வந்தால் கேசரியாகும் ரவை, வேண்டாதவர்கள் வரும்போது உப்புமாவாகி விருகிறது" என்றும் ஒரு குரூப் தங்களது ஆதங்கங்களைக் கொட்டி வருகிறது.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ஞாயிறு ஸ்பெஷல் சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

sunday food memes
sunday food memes
sunday food memes
sunday food memes
sunday food memes
sunday food memes
sunday food memes
sunday food memes
sunday food memes
More From
Prev
Next
English summary
These are some jolly memes collections on sunday special food.
Read Entire Article