மீன் பீர் குடிக்கும் வீடியோ! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..வைரலாகும் வீடியோ

3 hours ago
ARTICLE AD BOX

Viral Video Of Fish Drinking Beer : இணையத்தில் வைரலாகும் விஷயங்கள் ஒரு அளவே இல்லாமல் இருக்கிறது. ஒரு சில டான்ஸ் ஆடி பிரபலமாக வேண்டும் என்று நினைக்க, இன்னும் சிலர் ஒரு சில குழந்தைகளை அல்லது மிருகங்களை சித்திரவதை செய்து பிரபலமாகின்றனர். இது போன்ற விஷயங்கள் பல நேரங்களில் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருக்கணும் இவை குறைந்த பாடில்லை. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வைரலாகும் வீடியோ: 

நம்மில் பலருக்கு மீன் என்பது பிடித்த கடல் உணவாக இருக்கும். இதை வறுத்து பொறித்து பலவிதமாக சாப்பிடுவது வழக்கம். ஒரு நபர் ரோகு என்னும் ஒருவகையின் மீனை பிடித்து அதன் வாயில் பீர் ஊற்றும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பலரது மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த வீடியோவில் அந்த மீன் பார்க்கும்போது உயிருடன் தான் இருக்கிறது. தண்ணீரில் இருந்து எடுத்த சில நிமிடங்களில் இந்த மீனுக்கு பீர் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவர் மீனுக்கு பீர் கொடுத்துக் கொண்டிருக்க அந்த மீனும் அதனை மடக் மடக்கென முழுங்குகிறது. இன்னொருவர் பீர் கொடுத்துக் கொண்டிருக்கும் நபருக்கு அருகில் சென்று போஸ் கொடுக்கிறார்.

மிருகவதை?

இந்தியா போன்ற நாடுகளில் மிருகத்தை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பல அமைப்புகள் உள்ளன. இந்த வீடியோவை அப்படிப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும், மிருகங்களுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பவர்களும் பார்த்திருக்கின்றனர்.‌ அவர்களில் சிலர், இதனை மிருகவதை என்று கூறுகின்றனர். இன்னும் சில, அந்த மீனே பீரை விரும்பி குடிப்பது போலத்தான் இருக்கிறது, நீங்கள் ஏன் இப்படி கதறுகிறீர்கள் என இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கலாய்த்து வருகின்றனர்.இந்த வீடியோ, தற்போது பல ஆயிரம் லைக்ஸ்களை கடந்து, பல மில்லியன் வியூஸ்களையும் பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க | தேர்வு எழுத பாராசூட்டில் சென்ற கல்லூரி மாணவன்!! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article