கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!

2 hours ago
ARTICLE AD BOX

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பராமரிப்புப் பணிகளின் காரணமாக பிப்ரவரி 27 மற்றும் மார்ச் முதல் தேதியிலும் 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அன்றைய தேதிகளில் காலை 9.15 மணிமுதல் மாலை 3.15 மணிவரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 12 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க: அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் போராட்டம்!

Read Entire Article