மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

2 days ago
ARTICLE AD BOX
Chief Minister Stalin - Ministry of External Affairs

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதாவது, கடந்த 20-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களும், கடந்த 9-ஆம் தேதி 19 பேரை கைது செய்திருந்ததது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினை உடனடியாக கூட்ட வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும்.

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினை கூட்ட வேண்டும்என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய தோடு, இந்த ஆண்டில் மட்டும், 119 மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Entire Article