சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்பொழுது பல்வேறு ரவுடிகள் உருவாவது தொடர் கதையாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளும், பல பெரு நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில சமயங்களில் போட்டியாக இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களை மிரட்டுவதற்கு தொழிலதிபர்களே ரவுடிகளை உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் ஒரு புறம் இருந்து தான் வருகிறது.

படப்பை குணா

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.

வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு, படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து படப்பை குணம் மீது குண்டார் தடுப்பு சட்டம் போடப்பட்டது. வழக்குகளில் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக படைப்பு குணா வெளியில் இருந்து வருகிறார்.

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு

இந்தநிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக குணா மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .

சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடிப்படையில் ரவுடி படப்பை குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மீண்டும் ஒருமுறை போலீசாரல் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.