ARTICLE AD BOX
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை வேறு ஒரு சேனலில் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.
பிக்பாஸின் ஏழு சீசன் கமலஹாசனால் தொகுக்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. இதனையடுத்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. முதல் வாரம் அவரின் கேள்விகள் மற்றும் கவுண்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், போக போக அதுவே ரசிகர்களுக்கு வெறுப்பைக் கொடுத்தது
சீசன் 8ல் தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நா. முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டனர்.
சீசன் 7ல் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் 8ல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன.
கடந்த சீசனில் முத்துகுமரன் டைட்டில் வின்னரானார்.
இந்த நிகழ்ச்சி விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படியான நிலையில், இந்த நிகழ்ச்சி வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஜியோ ஹாட்ஸ்டாராக மாறியுள்ளது. இதனால் அதில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளும் ஜியோவுடைய கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக கூட ஒருமுறை பிக்பாஸை கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு செய்தார்கள். அதேபோல், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இதனை பிப்ரவரி 23ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு பார்க்கலாம் என்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. சேனல் டிஆர்பி அதிகமாக்க இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.