ARTICLE AD BOX
புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட நடிகர் சிவராஜ்குமார் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார்.பின், நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையே, அவர் நடித்த கோஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக, மஃப்டி திரைப்படத்தின் முன்கதையாக உருவான ‘பைரதி ரணகல்’ படத்தில் நடிக்கச் சென்றார்.
இதையும் படிக்க: ரஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ!
அப்படம் முடிந்ததும், தன் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்ல உள்ளதையும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.
இது ரசிகர்களிடம் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின், அங்கு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார்.
#Shivanna131 Shoot Begins #Shivanna #DrShivarajkumar#ShivarajKumar #ShivuaDDa pic.twitter.com/BIdROXY5lH
— ಶಿವು ಅಡ್ಡ™ | shivu aDDa™ (@shivuaDDa) March 4, 2025இந்த நிலையில், புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து தன் 131-வது படத்தின் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். பெங்களூருவில் துவங்கிய இப்படப்பிடிப்பில் அவருக்கு ரசிகர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.