உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!

3 hours ago
ARTICLE AD BOX

உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான பத்மகர் ஷிவல்கர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.

சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும், உள்ளூர்ப் போட்டிகளில் கோலோச்சிய பத்மகர் ஷிவல்கர் கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளார்.

இவர் 1962 ஆம் ஆண்டு அறிமுகமானார். மும்பையைச் சேர்ந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான பத்மகர் ஷிவல்கர் மும்பை அணிக்காக விளையாடியவர். இவர் 124 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவற்றில் ரஞ்சிப் போட்டிகளில் எடுத்த 361 விக்கெட்டுகளும் அடங்கும்.

பத்மகர் ஷிவல்கரின் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article