சிலம்பரசன்

காதலில் விழுவதும் , பிரேக் அப் ஆவது நடிகர் சிம்புவிற்கு புதிதல்ல. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளுடன் சிம்பு திரையில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ரொமான்ஸ் செய்திருக்கிறார். ஆனால் சிங்கிளாக இருக்கும் சிம்பு ரசிகர்களின் சாபமோ என்னவோ அவரது எல்லா காதலும் பிரிவில் சென்றுதான் முடிகிறது. கடைசியாக நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா காதலித்து வந்தார்கள். எத்தனை பிரிவுகளை சந்தித்தாலும் மறுபடியும் காதல் வராமலா போகும். அந்த வகையில் மீண்டும் ஒருமுறை காதலில் விழுந்துள்ளார் சிம்பு.

15 ஆண்டுகளை கடந்த விண்ணைத்தாண்டி வருவாயா

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. காதலைப் பற்றி வெளியான தமிழ் படங்களில் பெரியளவிலான ரசிகர்களை கவர்ந்த படம் இது. அதே போல் சிம்புவின் கரியரிலும் அவரை நடிகராக உயர்த்தியது. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் விடிவி கணேஷ் உடன் இணைந்து வீடியோ வெளியிட்டார்.

" விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த படம் முதல் முறை வெளியானபோதும் பெரிய ஹிட் ஆச்சு. மறுபடியும் ரீரிலீஸ் ஆனபோதும் 1000 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு மேஜிக்கல் ஃபிலிம். இந்த படத்தில் பணியாற்றிய கெளதம் மேனன் , ஏ.ஆர் ரஹ்மான் , த்ரிஷா , மனோஜ் பரமஹம்சா ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். " என சிம்பு தெரிவித்தார்.

#15yearsofVTV 🤍💙 pic.twitter.com/ElyfgVNtfm

— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025

தொடர்ந்து விடிவி படத்தின் ஃபேமஸ் டயலாக் 'இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா" என விடிவி கேட்க. 'இப்போ எல்லாம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லல வேற சொல்லுது அத சீக்கிரம் சொல்லுறேன்" என சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக பல்வேறு தகவல்வல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சிம்பு இந்த தகவலை ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

சிம்பு நடிக்கும் படங்கள்

சிம்பு தற்போது கமலின் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் . தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் பீரியட் படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார்.