ARTICLE AD BOX
செய்தியாளர்: S.மோகன்ராஜ்
சேலம் உடையாபட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் டிராகன் பட நாயகி கயாடு லோஹர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது மாணவிகளுடன் விஜய்யின் அப்படி போடு போடு உள்ளிட்ட பாடல்களுக்கு குத்தாட்டம் ஆடிய கயாடு லோஹர், ரஜினியின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை பாடி அசத்தினார்.
முன்னதாக தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கயாடு லோஹர், தமிழில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, முதல் படமான டிராகனுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
தொடர்ந்து தமிழ் படத்திற்கு நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க கையெழுத்து போட்டுள்ளேன் அதற்கான அறிவிப்பு வெளியாகும், கூடிய விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு உங்களிடம் தமிழில் பேசுவேன் என்று தெரிவித்தார்.