ARTICLE AD BOX
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.66,400க்கும், ஒரு கிராம் ரூ.8,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் செவ்வாய்க் கிழமை ரூ. 64,160-க்கும் விற்கப்பட்டது.
மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்! - விஜய்
புதன்கிழமை ரூ.360 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ. 64,960 என்ற புதிய உச்சத்தை தொட்டது.