ARTICLE AD BOX
ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை இரு சிறுவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் தீக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோர் கோவிலுக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கோவிலுக்குச் சென்றவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது சிறுமி மயக்க நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, தங்களது அண்டை வீட்டில் வசிக்கும் நபர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே சிறுமி இறப்பு குறித்து முழுமையான விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.