ARTICLE AD BOX
சென்னை: மீண்டும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிப்.11ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை, பவுனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. இப்படியாக நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டு வந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும், ரூ.63,000 என்ற விலைக்கு குறையாமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.63,520-க்கு விற்பனையானது.
தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, 5 நாட்களில் மட்டும் ரூ.1080 அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியுள்ளது நகை பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 அதிகரிப்பு appeared first on Dinakaran.