மிருணாள் தாகூர் பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் - வைரல்

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். 'சீதா ராமம்', 'ஹாய் நானா', 'பேமிலி ஸ்டார்' போன்ற தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு 'டகோயிட்' என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஷானியல் டியோ இயக்குகிறார். சுப்ரியா யர்லகடா மற்றும் சுனில் நரங் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இணைந்தார். இது அவரது தெலுங்கு அறிமுக படமாகும். இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் 'டகோயிட்' படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Read Entire Article