ARTICLE AD BOX

ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார்.

siragadikka asai serial today episode update 06-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா சாமி கும்பிட்டு கொண்டிருக்க முருகன் வித்யாவின் பின்னாலேயே ஓடுகிறார். அடுத்து என்னங்க என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வித்யா வெளியில் சென்றவுடன் சீதா கோயிலுக்குள் வந்து அருனுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் நடந்து வருகின்றனர்.
இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும் என்று கேட்க நான் யோசிக்கல கொஞ்ச நாள் ஃப்ரண்டா பழகுவோம் என்று சொல்ல அப்போ என்ன புடிச்சிருக்கா என்று கேட்கிறார் எப்படி சொல்றீங்க என்று கேட்க பிரண்டுன்னு சொல்றியே அதனால என்று சொல்லுகிறார். கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டீங்களா என்று கேட்க சரி நான் வெயிட் பண்றேன் என அருண் சொல்லுகிறார். மறுபக்கம் பரசு கல்யாணத்திற்கான வேலைகளுக்கு பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்க முத்துவும், மீனாவும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். மீனா விடம் பூ டெகரேஷனுக்கு எவ்வளவு ஆகும் மீனா என்று கேட்க அதெல்லாம் விடுங்க அங்கிள் பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார் இல்லம்மா நீ பூவெல்லாம் வாங்கணும்ல சொல்லு என்று சொல்ல 20 ஆயிரம் போதுமென்று சொல்லுகிறார் அப்போ ஆளுக்கு எல்லாம் கூலி கொடுக்கணுமே என்று சொல்ல அதெல்லாம் என் ஃபிரண்ட்ஸ் தான் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். உடனே அவர் 30,000 எழுதிக் கொள்கிறார்.
முத்துவிடம் காருக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்க, டீசலுக்கு மட்டும் நாலாயிரம் குடுங்க போதும் என்று சொல்ல சரி நான் 8000 எழுதுகிறேன் என்று சொல்லுகிறார். பிறகு மேக்கப் போடுவதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டு சொல்லுமா என்று சொல்ல ரோகினிக்கு போன் போட்டு விசாரிக்க 15,000 20,000 ஆகும் என்று சொல்ல அவரிடம் 10 ஆயிரத்துக்கு கொஞ்சம் பண்ணி தரீங்களா என்று கேட்கிறார். உடனே ரோகினி 12000 மட்டும் கொடுக்க சொல்லுங்க மேக்கப் கிட் காசு மட்டும் கொடுத்தால் போதும் எனக்கு வேண்டாம் என சொல்லி போனை வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் கறிக்கடைக்காரர் மணி பரசுவிற்கு ஃபோன் போட அவர் ஸ்பீக்கரில் போடுகிறார். பொண்ணு மாப்பிள்ளைக்கு தேவையான கட்டில் பீரோ எல்லாம் நான் வாங்குறேன் நீங்க எதுவும் வாங்க வேண்டாம்னு சொல்றதுக்காக தான் ஞாபகப்படுத்த பண்ணேன். என்று பேச இங்க முத்து என்று பேச வர அவர் போனை வைத்து விடுகிறார் ஆனால் அந்த குரலில் முத்துமீனாவிற்கு சந்தேகம் வருகிறது ஏதோ கேள்விப்பட்டு பழக்கப்பட்ட குரலா இருக்கு என்று யோசிக்கின்றனர் பிறகு அங்கிருந்து இருவரும் கிளம்பி வருகின்றனர்.
மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா விஜயாவிற்கு போன் போட்டு நான் சொன்ன விஷயத்தை மாப்ள கிட்ட பேசிட்டீங்களா என்று கேட்க இப்பதான் வந்தாங்க வந்தவுடனே எப்படி பேசுறது என்று சொல்லிவிட்டு எனக்கு தேவை என் பொண்ணு ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போகக்கூடாது. நீங்க தான் பேசணும் என்று சொல்லிவிட்டு போனை வைக்க விஜயா இப்போ யார்கிட்ட இருந்து ஆரம்பிக்கிறது முதல்ல இவர்கிட்ட பேசிடுவோமா என்று சொல்லி அருணாச்சலத்திடம் சென்று ஸ்ருதியின் அம்மா சொன்ன விஷயத்தை சொல்ல வரதட்சனை கொடுக்கிறார்களா என்று கேட்கிறார் நம்ம பையனோட நல்லதுக்கு தானே சொல்றாங்க என்று சொல்ல அவனுக்கு படிப்பு கொடுத்திருக்கும் நல்ல அறிவோட இருக்கா அவன் பொழைச்சுப்பான் என்று சொல்லுகிறார். அவங்களும் நல்லதுக்கு தானே சொல்றாங்க என்று சொல்ல அப்போ வரதட்சணை வாங்க போறியா என்று கேட்கிறார்.
ஏற்கனவே ஸ்ருதியோட அப்பா என் பொண்ணு பணத்துக்காக ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டீங்கன்னு சொல்றாங்க இப்போ இதை பண்ணா அதை ஒரு நியாயப்படுத்தற மாதிரி ஆய்டாதா அதுவும் இல்லாம இது ரவியும் சுருதியும் எடுக்க வேண்டிய முடிவு நான் இதுல தலையிட மாட்டேன் என்று சொல்லுகிறார் நீங்க சொன்னா அவங்க கேட்பாங்க என்று சொல்ல ஆமா நான் சொன்னா கரெக்டா இருக்குன்னு சொல்லி கேப்பாங்க ஆனா இந்த விஷயம் எனக்கு கரெக்ட்டுனு தோணல இது அவங்க எடுக்க வேண்டிய முடிவு என்று சொல்லிவிடுகிறார். உடனே விஜயா ரவி மற்றும் ஸ்ருதி இருவரையும் கூப்பிட முத்துமீனா ரோகிணி மனோஜ் அனைவரும் வருகின்றனர்.
ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்த விஷயத்தை சொல்ல முத்து பிளாக் செக் கூட வந்தாங்க என்று சொல்லுகிறார் அது பிளாங்க் செக் என்று மனோஜ் சொல்ல அது கருப்பு பணம் செக்கு தானே என்று முத்து சொல்லுகிறார். என்னடா சொல்ற என்று கேட்க நம்ம குடும்பம் பணத்துக்கே வழியில்லாமல் பார்லர் அம்மாவை வேலைக்கு அனுப்பி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோமா அதனால செக் கொடுக்க வந்தாங்க என்று சொல்லவே டென்ஷன் ஆகிறார். நான்தான் ரெஸ்டாரண்ட்ல இத பத்தி பேசி அனுப்பிட்டேனே என்று சொல்ல மனோஜ் அந்த செக்கையும் கிழிச்சு சுருதி அம்மாவையும் இன்ஸ்சல் பண்ணிட்டான் என்று சொல்ல நானா இருந்தாலும் அதை தான் பண்ணி இருப்பேன் என ரவி சொல்லுகிறார்.
உடனே விஜயா அவன் பேச்சை கேட்டுகிட்டு நீ எதுக்கு இப்படி பேசுற அவங்க உனக்கு ரெஸ்டாரன்ட் வச்சி தரேன்னு சொல்றாங்க என்று சொல்ல எனக்கு அடுத்தவங்க காசு வேணாம் நானே சம்பாதிச்சு வச்சுப்பேன் என்று சொல்ல அதற்கு முத்து சூப்பர் டா நீ தாண்டா என் தம்பி என்ன சொல்லுகிறார்.
பிறகு சுருதி என்ன சொல்லுகிறார்? அதற்கு ரவியின் பதில் என்ன?முத்து ரவியிடம் என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 06-03-25
The post அண்ணாமலை கொடுத்த ஷாக்,ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.