ARTICLE AD BOX
மிரண்டுடுச்சு மிட்-ரேஞ்ச்.. ZEISS கேமரா.. 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 3டி ஸ்டார் டெக்னாலஜி டிசைன் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஓம்னிவிஷன் சென்சார் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுத்த விவோ வி50 5ஜி (Vivo V50 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய சலுகைகளுடன் அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
இந்த விவோ வி50 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் அதிகப்படியான பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆகவே, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால் ரூ.3,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ அல்லாமல் ஆர்டர் செய்தால், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே இந்த விவோ வி50 5ஜி போனை, ரூ.31,499 விலையில் வாங்கி கொள்ள முடிகிறது.
விவோ வி50 5ஜி அம்சங்கள் (Vivo V50 Specifications): இந்த விவோவில் 3டி ஸ்டார் டெக்னாலஜி (3D Star Technology) பேனல் கொண்ட ஸ்டார்ரி நைட் (Starry Night) வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ரோஸ் கோல்டு (Rose Red) போன்ற பிரீமியம் பேனல் வேரியண்ட்களும் கிடைக்கின்றன. IP68 மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
மிட்-பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (4nm Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் மற்றும் பட்டையை கிளப்பும் கேமரா பீச்சர்களை கொடுக்கும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. இந்த விவோ வி50 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
3டி ஸ்டார் டெக்னாலஜி மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் டிசைனில் 6.77 இன்ச் (2392 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
கர்வ்ட் டிசைனில் இருப்பதால், டயமன்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த விவோ வி50 5ஜி போனில் ஓம்னிவிஷன் ஓவி50இ (Omnivision OV50E) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராக்களில் சாம்சங் ஜேன்1 (Samsung JN1) சென்சார் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஜீஸ் போர்ட்ராய்டு பீச்சர்களை கொடுக்கிறது. இந்த விவோ வி50 5ஜி போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.