மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்

2 months ago
ARTICLE AD BOX

ஆக்டிவா இ, க்யுசி1 ஆகிய மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரண்டு புதிய ஸ்கூட்டா் ரகங்களை ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 34 சதவீதம் என்ற வேகத்தில் வளா்ந்து வரும் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த ஸ்கூட்டா்களை நிறுவனம் மாற்றக்கூடிய மற்றும் நிலையான பேட்டரிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகாா்ப், டிவிஎஸ் போன்ற வழக்கமான போட்டியாளா்கள் மட்டுமின்றி ஏத்தா், ஓலா போன்ற போன்ற பிரத்யேக மின்சார வாகனத் தயாரிப்பாளா்களுடனும் ஹோண்டா நிறுவனம் போட்டியில் இறங்கியுள்ளது.

புதிய ஆக்டிவா இ மற்றும் கியுசி1 வாகனங்களுக்கான முன்பதிவு வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Entire Article