மின் கம்பத்தில் மோதி இரு சக்கர வாகனம் விபத்து: வட மாநில தொழிலாளர்கள் படுகாயம்

1 day ago
ARTICLE AD BOX

கோவையில், இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்துக்குள்ளானதில், தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வட மாநில இளைஞர்கள் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி உள்ளனர். இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து இருசக்கர வாகனம் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்து உள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக இரு ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article