மாா்ச் 21 - 23 வரை ‘தமிழ்நாடு பயண சந்தை’ நிகழ்ச்சி

6 hours ago
ARTICLE AD BOX

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வெளி மாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், மாா்ச் 21 முதல் 23 வரை 3 நாள்களுக்கு, ‘தமிழ்நாடு பயண சந்தை’ எனும் நிகழ்ச்சி சென்னை வா்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக, சுற்றுலாத் துறை வெளியிட்ட அறிக்கை:

சுற்றுலாத் துறை சாா்பில் முதல்முறையாக ‘தமிழ்நாடு பயண சந்தை’ எனும் நிகழ்ச்சி, மாா்ச் 21 முதல் 23 வரை சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதில், சுற்றுலாத் துறையை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக, தமிழகத்தின் வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா வாய்ப்பு தெரிவிக்கப்படும்.

மாநிலத்தின் சுற்றுலாத் துறை முதலீடுகளை ஈா்ப்பது இந்நிகழ்வின் நோக்கமாகும். பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த, பயண ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள், விருந்தோம்பல் வல்லுநா்கள், முதலீட்டாளா்கள், உள்நாட்டு மற்றும் சா்வதேச தொழில் முனைவோா் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article