ARTICLE AD BOX
இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் மாஸ்டர்ஸ் லீக் 2025 டி20 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரில் 5 அணிகள் விளையாடின. சச்சின் தலைமையில் இந்தியா, பிரைன் லாரா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ், குமார் சங்ககாரா தலைமையில் இலங்கை, ஜேக் காலிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்கா, இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணிகள் பங்கேற்றன.
அதில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி தங்களது லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தோற்கடித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து ஃபைனல் சென்றது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்:
மறுபுறம் பிரைன் லாரா தலைமையில் இந்தியாவிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தியது. அப்படியே அரை இறுதிப் போட்டியில் இலங்கையையும் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது.
இரவு 7.30 மணிக்கு துவங்கும் அந்தப் போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், பதான் சகோதரர்கள், வினய் குமார், ராயுடு ஆகியோர் ஓய்வு பெற்றாலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தனர். குறிப்பாக சச்சின் க்ளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் யுவராஜ் சிக்சர்களை பறக்க விட்டதும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைக் கொடுத்தது.
நேரலை ஒளிபரப்பு:
அதே போல கிறிஸ் கெயில், லெண்டில் சிம்மன்ஸ், ட்வயன் ஸ்மித், தினேஷ் ராம்டின் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் லாரா தலைமையில் சிறப்பாக விளையாடி ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு அழைக்கின்றனர். அப்படிப்பட்ட அவ்விரு டாப் அணிகள் மோதும் இறுதிப்போட்டி தரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
இதையும் படிங்க: 2028 ஒலிம்பிக்கில் விளையாடுவீர்களா? ஓய்வுக்குப் பின் எங்கே விளையாடுவார்கள்? விராட் கோலி பதில்
சச்சின் – லாரா தலைமையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் அந்தப் போட்டியை ரசிகர்கள் கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் நேரடியாக பார்க்கலாம். அது போக கலர்ஸ் சினிபிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் சேனலிலும் பார்த்து ரசிக்க முடியும். மொபைல் மற்றும் ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் ஆஃ ப் வாயிலாக கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மாஸ்டர்ஸ் லீக் 2025: சச்சினின் இந்தியா – லாராவின் வெ.இ மோதும் ஃபைனலை எந்த சேனலில் பார்க்கலாம்? appeared first on Cric Tamil.