ARTICLE AD BOX
நடிகர் கவின் நடித்த மாஸ்க் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியைப் படம் சந்திக்கவில்லை.
தொடர்ந்து, ஆண்ட்ரியா தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் கதாநாயகியாக ருஹானி ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.
