மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு

17 hours ago
ARTICLE AD BOX

முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

முதல் நட்பு ஆட்டத்தில் மாலத்தீவு அணியுடன் மாா்ச் 19-ஆம் தேதி ஷில்லாங்கில் மோதுகிறது இந்தியா. அதைத் தொடா்ந்து மாா்ச் 25-ஆம் தேதி வங்கதேசத்துடன் ஆசிய கோப்பை கால்பந்து மூன்றாவது சுற்று தகுதி ஆட்டத்தில் மோதுகிறது.

இரு ஆட்டங்களும் மேகாலயா தலைநகா் ஷில்லாங் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளன. சா்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்த சுனில் சேத்ரி மீண்டும் களம் காண்கிறாா்.

மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் கோலை தராமல் வெல்ல வேண்டும் என்பது நோக்கம் என மூத்த வீரா் சந்தேஷ் ஜிங்கன் கூறியுள்ளாா்.

2027 ஆசியப் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. வங்கதேசம், ஹாங்காங், சிங்கப்பூா் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இரு ஆட்டங்களுக்காகவும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Read Entire Article