மார்ச் 24, 25ம் தேதி களில் வங்கிகள் நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைப்பு…!

5 hours ago
ARTICLE AD BOX

பெருமுதலாளிகளுக்கான வங்கிக் கடன்கள் ரத்து, வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்டவற்றை கண்டித்து மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கடாசலம் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கோடிக்கணக்கான மக்கள் தினமும் வங்கியை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதற்கேற்ப பணியாளர்கள் வங்கிகளில் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக திட்டமிட்டு வங்கிகளில் ஊழியர்களை குறைத்துக் கொண்டே வருகிறார்கள். இதனால், ஊழியர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதுடன், வாடிக்கையாளர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர். பொதுத்துறை வங்கிகளில் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்கம் விரும்பும்படியாக பொதுமக்கள் தனியார் வங்கிகளுக்கு சென்று விடுவார்கள். மேலும், மத்திய அரசு வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.
பெருமுதலாளிகளுக்கு கொடுத்த கடன்கள் எல்லாம் வசூலிக்கப்பட முடியாமல் ரத்து செய்யப்படுவதால் தான் வங்களின் லாபம் குறைகிறது. லாபத்தை அதிகரிக்க ஊழியர்களின் ஊதிய செலவைக் குறைக்கப் பார்க்கிறார்கள். அதனால் தான் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். மேலும், அனைத்து வார இறுதியிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை தேவை. ஊழியர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 70% வரை வாராக்கடன்களை தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த நஷ்டத்தை சரி செய்ய வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் உள்ளிட்டவைகளை வங்கிகள் பெறுகின்றன. அதனால், வாராக்கடன் தள்ளுபடி, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவில் ஒன்பது வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 24, 25 ஆகிய தேதியில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக,” அறிவித்திருந்தார். இந்தநிலையில் டெல்லியில் மத்திய அரசுடன் வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பினர் நேற்று (மார்ச் 21) வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் வெங்கடாசலம், தங்களுடைய கோரிக்கை தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமுகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மார்ச் 24, 25ஆம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

The post மார்ச் 24, 25ம் தேதி களில் வங்கிகள் நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைப்பு…! appeared first on Rockfort Times.

Read Entire Article