மார்ச் 22-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்!

11 hours ago
ARTICLE AD BOX

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள்(மார்ச் 22) சென்னையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் 22-03-2025 சனிக்கிழமை அன்று காலை சுமார் 10:30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது"

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல கட்சி சார்ந்த முடிவுகளும் 2026 பேரவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க 'வாசகங்கள் பொறித்த டி-ஷர்ட்டுக்கு அனுமதியில்லை' - திமுக எம்.பி.க்களிடம் கூறிய அவைத் தலைவர்
Read Entire Article