ARTICLE AD BOX
மாயாவை கடத்திய கார்த்திக்.. கல்யாணத்தை நிறுத்த போட்ட பிளான்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: சாமுண்டீஸ்வரியின் தோழி ஒருவர் வீட்டுக்கு வந்து, என்னால் கல்யாணத்திற்கு வர முடியாது என்பதால், பெண்ணை பார்த்துவிட்டு வாழ்த்து சொல்லலாம் என்று வந்தேன் என்று ரேவதியை வாழ்த்திவிட்டு, வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக கொடுக்கிறாள். இதைப்பார்த்த மாயா, மகேஷிடம் அந்த நெக்லஸ் சூப்பராக இருக்கு என்று சொல்ல மகேஷ், கல்யாணம் ஆனதும், அது உன் கழுத்துக்குத்தான் வரபோகிறது என்று சொல்கிறான்.
இதை கவனித்த கார்த்திக் நெக்லசை மறைத்துவைத்து நாடகமாடுகிறான், ரேவதி நகை இல்லாததைப்பார்த்து பதற்றப்படுகிறாள். அனைவரும் நகையை தேட, மாயா கடுப்பாகி, ரேவதி,உன்னால் ஒரு நகையை கூட பத்திரமா பார்த்துக்க முடியாதா, என்னிடம் கொடுத்து இருந்தாலும் நான் நல்லபடியாக வைத்து இருப்பேன், உனக்கு பணத்தோட அருமையே தெரியவில்லை என சத்தம் போடுகிறாள். அப்போது, நகை எங்கே போய்விடப்போகிறது வீட்டிற்குள் தான் இருக்கும், தேடினால் கிடைக்கப்போகிறது என்று சொல்லி, மறைத்துவைத்திருந்த நகையை எடுத்து கொடுத்துவிட்டு, மாயா, உங்களுக்கு நகை தான் முக்கியமா? நீங்க ஏழை என்று தெரிந்தும், ரேவதி மகேசை கல்யாணம் செய்ய நினைச்சாங்க, ஆனால், நீங்க நகை தான் முக்கியம் என்பது போல பேசுறீங்க என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், மகேஷ் வீட்டிற்கு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் உள்ளே வருகின்றனர். அப்போது, கல்யாணத்துக்காக மகேஷுக்கு கோர்ட் எடுக்கணும் சாமுண்டீஸ்வரி அம்மா கடைக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்லி அழைக்க, மகேஷ், மாயா இல்லை அவங்க வந்ததும் போகலாம் என்று சொல்லி வர மறுக்கிறான். அப்போது கார்த்திக், கோர்ட் எடுக்க அவங்க எதற்கு நீ வாங்க போகலாம் என்று சொல்ல, மகேஷ் வேற வழியே இல்லாமல், அவர்களுடன் கிளம்பி செல்கிறான்.

எல்லாமே கார்த்திக் பிளான்: பிறகு இவர்கள் கடைக்கு வந்து கோர்ட் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக், ராஜராஜனுக்கு போன் போட்டு சொன்ன பிளானை செய்து முடித்திடுங்க என்று சொல்கிறான். உடனே சரி என ராஜராஜன் மாயா வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரி உங்கள பாக்கணும்னு சொன்னா.. உங்க போன் ரீச் ஆகவே மாட்டேங்குது கோவில்ல இருக்காங்க போய் பாத்துட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறான். உடனே மாயா ஒரு ஆட்டோவில் கிளம்ப வழியில் அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்கிறது. இந்த நேரம் பார்த்து, யாரோ ஒருவன் மாயாவின் கவனத்தை திசை திருப்பி அவளது போனை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான். கடைசியில் இது அனைத்தும் உண்மையை வர வைப்பதற்காக கார்த்திக் போடும் திட்டம் என தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
