ARTICLE AD BOX
மகேஷ் குறித்த உண்மையை உடைத்த கார்த்திக்.. கடும் கோபத்தில் ரேவதி, காத்திருக்கும் ட்விஸ்ட் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்து கொள்ளாமல் என்று சொல்லிய நிலையில் இன்று, அருண் ஆனந்த் ஆகியோரால் கடத்தப்பட்ட நவீனும் மண்டபத்திற்கு வந்து விடுகிறான், இதனால் மாயா சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் நவீனை வைத்து ரேவதியின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று முடிவெடுக்கிறான்.
ஆனால் நவீன் துர்காவை தான் நான் ரேவதி என நினைத்திருந்ததாகவும் அவளை தான் தனக்கு பிடித்திருப்பதாகவும் சொல்ல கார்த்திக் ஷாக் ஆகிறான், இதனால் நவீன் ரேவதியை திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை உருவாகிறது. கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல முடிவெடுக்கிறான். அதற்குள் மாயா ரேவதியிடம் சென்று அந்த ட்ரைவர் உங்க அம்மா கிட்ட போய் எனக்கும் மகேஷ்க்கும் தப்பான தொடர்பு இருப்பதாக சொல்ல போவதாக செல்கிறான் என்று சொல்கிறாள்.
கார்த்தியும் சாமுண்டீஸ்வரியை சந்தித்து மகேஷ் நல்லவன் இல்லை என்று சொல்ல ரேவதி இதை ஜன்னல் வழியாக பார்த்து கார்த்திக்கை தவறாக புரிந்து கொள்கிறாள். சாமுண்டீஸ்வரி உனக்கு எங்க குடும்பத்து மேல அக்கறை இருக்கு தான், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மகேஷ் தான் மாப்பிள்ளை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதை இப்படியே விட்டுடு என்று சொல்ல ரேவதி நிம்மதியடைய கார்த்திக் ஏமாற்றம் அடைகிறான். ரேவதியின் வாழ்க்கையை காப்பாற்ற அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான்.
இதனை தொடர்ந்து மாயா மீண்டும் ரேவதியை சந்தித்து ட்ரைவர் பற்றி தப்பு தப்பாக சொல்லி ஏற்றி விடுகிறாள். மறுபக்கம் ராஜேஸ்வரி சாமுண்டீஸ்வரியை சந்தித்து என்னாச்சு எங்க போய் இருந்த என்று கேட்க தான் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சண்முகம், சௌந்தரபாண்டி இடையே உருவாகும் மோதல்.. தனியாக கிளம்பி சென்ற பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பரணியை சென்னைக்கு அழைத்து சென்று அப்படியே அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்த நிலையில் இன்று, பரணி சென்னை செல்லும் விஷயம் அறிந்து பாக்கியமும் சண்முகத்தின் குடும்பத்தாரும் சண்முகத்திடம் பரணியை சென்னைக்கு அழைத்து செல்ல சொல்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான இடைவெளி குறையும் என எதிர்பார்க்கின்றனர்.
சண்முகமும் அதற்கு தயாராக சௌந்தரபாண்டி இங்கே வந்து விடுகிறார். பரணியை நான் தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்கிறார். பாக்கியம் நீங்க எதுக்கு போறீங்க? சண்முகம் போயிட்டு வரட்டும் என்று சொல்ல சௌந்திரபாண்டி அதெல்லாம் முடியாது, என் பொண்ணுடன் நான் தான் போவேன் என்று உறுதியாக சொல்கிறார். அவ என் பொண்டாட்டி, அவ கூட நீ எதுக்கு போகணும்? என்று சண்முகம் சௌந்தரபாண்டியிடம் சத்தம் போட இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது.
இதனால் கடுப்பாகும் பரணி என் கூட யாரும் வர வேண்டாம்.. எனக்கு சென்னைக்கு போக வழி தெரியும். நானே போகிறேன் என்று கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
அஞ்சலியால் உச்சகட்ட பதட்டத்தில் மகேஷ்.. உடையுமா உண்மை முகம்? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் அஞ்சலி தல தீபாவளியை கொண்டாட லட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று, அஞ்சலியை பார்த்ததும் தியா நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணோம் என்று சொல்கிறாள். அதன் பிறகு அஞ்சலி மகேஷிடம் வந்து அக்கா கூட தான் நான் எப்போதும் தூங்குவேன்.. இன்னைக்கு நான் அக்காவோட படுத்து தூங்கவா என்று கேட்க மகேஷ் முதலில் கோபித்துக் கொள்ள இதனால் அஞ்சலி வருத்தம் அடைகிறாள்.
பிறகு அதை கவனித்த மகேஷ் இதெல்லாம் ஏன் செல்லம் என்கிட்ட கேக்குற நீ போய் தூங்கு என்று சொல்கிறான். அதே நேரத்தில் வீட்டில் நடக்கிறது எல்லாம் அஞ்சலி அவங்க வீட்ல இருக்கவங்ககிட்ட சொல்லிட்டா என்ன பண்றது என மகேஷ் பதட்டம் அடைகிறான். அதன் பிறகு அஞ்சலி அவங்க அப்பா அம்மா கிட்ட என்ன பேசுறா என ஒட்டு கேட்க அஞ்சலி மகேஷ் குறித்து நல்ல விதமாகவே சொல்கிறாள்.
பிறகு தியா மற்றும் துளசி ரூமில் இருக்க அஞ்சலி நடுவில் வந்து படுக்க துளசி இங்க எதுக்கு வந்த? மகேஷ் ஏதாவது தப்பா நினைக்க போறாரு என்று சொல்ல, அஞ்சலி அவரிடம் சொல்லிட்டு தான் வந்தேன். அவரும் உங்க கூட போய் தூங்க சொன்னாரு என்று சொல்கிறாள். பிறகு தியா ட்ரீட்மெண்ட் குறித்து விசாரிக்கிறாள். மகேஷிடம் உதவி கேட்பதாக சொல்ல துளசி வேண்டாம் இப்போது எனக்கு நல்ல வேலை கிடைச்சிருச்சு. நானே பார்த்துக்கொள்கிறேன் என சொல்கிறாள்.
இதனைத் தொடர்ந்து மறுபக்கம் வெற்றியின் வீட்டில் கேசவன், தீபா ஆகியோர் வந்திருக்க ஈஸ்வரமூர்த்தியின் பிஏ ஒரு இன்விடேஷனை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க என் பொண்ணோட கல்யாணத்தை இந்த மாதிரி பெருசா நடத்தணும்னு ஆசைப்பட்டேன் ஆனா எதுவுமே நடக்காம போயிடுச்சு என கேசவனிடம் கோபப்படுகிறார். இதை கேட்ட வெற்றி இப்ப எதுக்கு மாமாவை திட்டிகிட்டு இருக்கீங்க? அவர் கூடிய சீக்கிரம் பிசினஸ் பண்ண போறாரு.. வாழ்க்கையில நல்லா வருவாரு என முதல்முறையாக கேசவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறான்.
இதை கேட்டு தீபா, தீபாவின் அம்மா என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.