மாப்பிள்ளை பார்க்க வருவது போல் நடித்து 8 சவரன் தங்க நகையை அபேஸ்..!! 4 பெண்கள் கைது

9 hours ago
ARTICLE AD BOX

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் எல்.ஐ.சி. முகவராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் இருக்கிறார்கள். எல்ஐசி முகவருக்கு அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

தற்போது எல்.ஐ.சி. முகவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை கவனிக்க வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி. முகவர் 2-வது திருமணம் செய்ய விரும்பி உள்ளார். இதற்காக ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், நற்சீசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், குடும்பத்துடன் மாப்பிள்ளை பார்க்கவருவதாகவும் கூறியுள்ளனர். அதன்படி மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் வந்துள்ளனர். அப்போது நற்சீசன் வீட்டில் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகளை அவர்களிடம் காண்பித்து விட்டு மேஜை டிராயரில் வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 2 நாட்கள் கழித்து பார்த்தபோது மேஜை டிராயரில் வைத்திருந்த 8 சவரன் நகைகள் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மாப்பிள்ளை பார்க்க வந்த நபர்களை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர்களுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நற்சீசன், ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நகையை திருடிச் சென்றது. மதுரை கும்பல்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி, கார்த்திகாயினி. முத்துலட்சுமி. போதும்பொண்ணு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more :IPL 2025.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா.. ஜியோ அதிரடி அறிவிப்பு..

The post மாப்பிள்ளை பார்க்க வருவது போல் நடித்து 8 சவரன் தங்க நகையை அபேஸ்..!! 4 பெண்கள் கைது appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article