மாநில அதிகாரம் திடீர் பறிப்பு .. சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசு அனுமதி இனி தேவையில்லை!

3 days ago
ARTICLE AD BOX

மாநில அதிகாரம் திடீர் பறிப்பு .. சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசு அனுமதி இனி தேவையில்லை!

Chennai
oi-Rajkumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருமொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், சிபிஎஸ்சி விதிமுறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்க தேவையில்லை என புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

CBSE central govt delhi

இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது ஒருபுறம் இருக்க இருமொழிக் கொள்கை தான் தமிழ்நாட்டில் இருக்கும், மும்மொழி கொள்கைக்கோ, இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் இடம் கிடையாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுவது, புதிய விதிமுறைகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடக்கும் நிலையில் அதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வு ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிபிஎஸ்சி கல்வி தொடர்பான விதிமுறைகளை மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில விதிமுறைகள் மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது போல இருப்பதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.

குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்தும் மத்திய அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற வேண்டும். ஆனால் புதிய நடைமுறை மூலம் தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழை தற்போது பெறத் தேவையில்லை.

மேலும் புதிதாக தொடங்க இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றால் நேரடியாக மத்திய அரசிடமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும்போது ஏதாவது ஆட்சேபணை இருந்தால் அது தொடர்பாக மாநில கல்வித் துறையிடம் மத்திய அரசு கருத்து மட்டுமே கேட்கும். மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என புதிய விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே கல்வி துறையில் தேசிய கல்விக் கொள்கை மூலம் மாநில அரசுகள் மீது மத்திய அரசு சுமையை ஏற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு இருக்கும் நிலையில் தற்போது மாநில அரசு அனுமதி இல்லாமலேயே சிபிஎஸ்சி பள்ளிகளை தொடங்கலாம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
English summary
The central government has amended CBSE regulations, removing the need for state government clearance for private schools. This move has intensified the conflict between the Tamil Nadu and central governments over the two-language policy.
Read Entire Article