ARTICLE AD BOX

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு டெல்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னால் எம்.பி சஜ்ஜன் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி காங்கிரஸ் முன்னாள் எம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.