ARTICLE AD BOX
மாதந்தோறும் பணம் வரும், கடன் வசதி.. எல்ஐசி ஸ்மார்ட் பென்சன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்..!
சாமானிய மக்கள் மற்றும் தனியார் துறையில் வேலைபார்க்கும் மக்களுக்கு நிம்மதியான மற்றும் நிதி நெருக்கடி இல்லாத ஓய்வுகாலத்தை வழங்கும் நோக்கில் எல்ஐசி நிறுவனம் ஸ்மார்ட் பென்சன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கான தகுதி, வருடாந்திர விருப்பங்கள் உள்ளிடவற்றை பார்ப்போம்.
பென்சன் திட்டத்துக்கான தகுதிகள்: இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது முதல் 100 வயதுவரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். இருப்பினும், வருடாந்திர விருப்பத்தின் அடிப்படையில் வயது தகுதி மாறுபடும்.

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகை:
குறைந்தபட்சம் ரூ.1,00,000 செலுத்தி இந்த பென்சன் திட்ட பாலிசியை வாங்கலாம்.
எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் எந்தவித உச்சவரம்பு கிடையாது இருப்பினும் ஒப்புதலுக்கு உட்பட்டது.
வருடாந்திர விருப்பங்கள்:
ஸ்மார்ட் பென்சன் பிளான் ஒற்றை மற்றும் கூட்டு என இரண்டு விதமாக உள்ளது.
ஒற்றை ஆயுள் வருடாந்திரம் விருப்பத்தின்படி, வருடாந்திர தொகை பெறுபவரின் வாழ்நாள் முழுவதும் வழக்கமான வருடாந்திர செலுத்துல்களை வழங்குகிறது.
கூட்டு ஆயுள் வருடாந்திர திட்டத்தின்கீழ், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வருடாந்திர தொகை பெறுபவர்களுக்கு வருடாந்திர தொகை செலுத்துதல்களை உறுதி செய்கிறது. ஒரு குடும்பத்தின் இரண்டு வாரிசுகள் அல்லது உடன்பிறந்தவர்கள் அல்லது மாமியார் இடையே இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.
வருடாந்திர தொகை பெறும் விருப்பங்கள்:
பாலிசிதாரர் வருடாந்திர தொகையை பெற தேர்வு செய்யலாம். அதாவது, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் இவற்றில் எதையாவது தேர்வு செய்து வருடாந்திர தொகையை பெறலாம்.
இறப்பு பலன்கள் தேர்வு:
எல்ஐசி ஸ்மாா்ட் பென்சன் திட்ட சந்தாதாரர் இறந்த பிறகு, அவரது பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு (நாமினி) மொத்த தொகை வழங்கப்படும்.
ஒருவேளை நாமினி அந்த தொகை பெறாமல் அதனை மற்றொரு வருடாந்திர பென்சன் திட்டமாக மாற்ற வேண்டும் என்றால் மாற்றி கொள்ளலாம்.
5,10,15 ஆண்டுகளில் தவணைகளில் பெறலாம்.
பணப்புழக்க விருப்பம்:
சந்தாதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிசியை வாங்கிய விலையில் 60 சதவீதம் வரை திரும்ப பெறலாம். உதாரணமாக ஒருவர் இந்த பாலிசியை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 லட்சத்தில் ரூ.60,000 வரை திரும்ப பெற முடியும்.
கடன் வசதி:
ஸ்மார்ட் பென்சன் பாலிசி தொடங்கியதிலிருந்து 3 மாதங்களுக்கு பிறகு சந்தாதாரர்கள் கடன் வசதியை பெறலாம்.
Story written by: Subramanian