மாத பூஜை நாட்களில் சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

20 hours ago
ARTICLE AD BOX

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜை நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு சாத்தப்படும். தற்போது மாத பூஜை நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவதால் தரிசன நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாலை 5 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் முன்னதாக 4 மணிக்கு நடை திறக்கப்படும். மேலும் இருமுடிக் கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு தினமும் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

The post மாத பூஜை நாட்களில் சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article