ARTICLE AD BOX

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பெரும்பாலானோர் பயன் பெறுவது மட்டுமல்லாமல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனிடையே மாற்றுத் திறனாளி குழந்தைகளை படிக்க ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.2000, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 6000 ரூபாய், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை எட்டாயிரம் ரூபாய், பட்டப்படிப்புக்கு 12,000 மற்றும் முதுகலை பட்டத்திற்கு 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் வரியின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டத்தின் கீழ் பிஎச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி ஆராய்ச்சி படிப்பு பிஎச்டி மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் 50 மாணவர்கள் பயன் பெறும் விதமாக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாற்றுத்திறனாளின் நலத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.