மாணவர்களுக்கு தேர்வு... நாட்டை ஆள்பவர்களுக்கு தேர்வு உள்ளதா? சீமான் கேள்வி!

3 hours ago
ARTICLE AD BOX

தி.மு.க விற்கு எதிரான வாக்குகளை ஒன்றினைக் வேண்டும் என் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது வரவேற்க தக்கது. இதில் முதன்மையான பங்காக என்னுடையது இருக்கும். நான் மட்டும் தனியா இருப்பேன். கூட்டணியில் இல்லாமல் வெல்ல முடியும் கொள்கை இல்லாமல் கூட்டணி மட்டும் வென்று விடுமா? என்று,கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமா, எதிர்க்கிறோமா ? என்பதில் நாம் தெளிவான முடிவெடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வியை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஜவகர் நேசன் கல்வி திட்டத்தை வகுக்கும் குழுவில் இருந்து வெளியேறியது புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் தான் வெளியேறி இருக்கிறார். மிகப்பெரிய கல்வி ஆய்வாளர்கள் வல்லுநர்கள் அனைவருமே, இது நம்முடைய குழந்தைகளுக்கு எழுதி வைக்கிற மரண சாசனம் என்று தான் கூறுகிறார்கள்.

கல்வி சுகமாக இருக்க வேண்டுமே தவிர சுமையாக இருக்கக் கூடாது. எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு சுமை நான் பிறந்த நாட்டில், நான் விரும்பிய கல்வியை கற்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.  மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் முதுகலை எழுதுவதற்கு கூட ஒரு நீட் பரிட்சை எழுத வேண்டி இருக்கிறது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்காது. அனைத்திற்கும் தேர்வு வைக்கிறவர்கள், நாட்டையே நிர்வகிக்கிற பொறுப்பில் இருக்கக் கூடிய தலைவர்கள் என்ன தேர்வு எழுதுகிறார்கள்.

எந்த தகுதியுமே இல்லாதவர் இந்த நாட்டை ஆளும் தகுதியை பெற்றிட முடியும். ஆனால் ஒரு வழக்கறிஞர் நீதிபதி ஆவதற்கு தேர்வு எழுத வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்றாலும் தேர்வு எழுத வேண்டும். மாவட்ட ஆட்சிப்பணி இந்திய குடிமைப்பணி என எதை எடுத்துக் கொண்டாலும் தேர்வு எழுதி தான் வரவேண்டும். கல்வியிலேயே தலைசிறந்த நாடாக இருக்கக் கூடிய தென்கொரியா எட்டு வயதில் தான் பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள். இங்கு எட்டு வயதில் இருக்கக் கூடிய பிள்ளைகள் பொது தேர்வு எழுதுகிறார்கள்.

Advertisment
Advertisements

அந்த இடத்தில் தோற்று விட்டால் கல்வி என்பது அந்தப் பிஞ்சு நெஞ்சில் நஞ்சாக மாறிவிடாதா? 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வந்த மாணவிகளே நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கிற சமூக சூழலில், தோல்வியை வெற்றியின் தாய் என கற்பித்து கொடுக்காமல், தோல்வி அடைந்தால் அனைத்தும் முடிந்து விடும் என்பதையே இந்த சமூகம் கட்டமைக்கிறது. கல்வியை வியாபாரமாகி விட்டு சமகல்வி சம உரிமை என்று பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு என்று ஒரு கல்வி தான் இருக்கிறது.

கல்வி எங்கு இங்கு சமமாக உள்ளது, பணம் இருந்தால் நல்ல கல்வியை பெற்றுக் கொள்ள முடியும். பணம் இருந்தால் நீ பயிற்சி மையங்களில் பயிற்சியில் சேர முடியும். எத்தனை குழந்தைகள் பணம் இல்லாமல் இடைநிறுத்தம் செய்து செல்கிறார்கள் என்று ஆய்வுகள் இருக்கிறது, நகர்ப்புறங்களில் இருக்கக் கூடிய கல்வி கட்டமைப்பு சிற்றூர்களில் இருக்கிறதா?, இந்த நாட்டில் வரிகள் ஒன்றாக உள்ளது. ஆனால் வாழ்க்கை தரம் ஒன்றாக உள்ளதா? அமைச்சர் பெருமக்கள் பயிலுகிற கல்வியும், சாதாரண மக்கள் பயில்கிற கல்வியும் ஒன்றாக உள்ளதா? இந்த நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பெரும் மருத்துவமும், சாதாரண ஏழை மக்கள் பெரும் மருத்துவமும் ஒன்றாக உள்ளதா?

அனைத்தையும் இங்கு வியாபார பொருளாகிவிட்டு வெற்று வார்த்தைகளை வைத்து சம கல்வி என மக்களை ஏமாற்றுகிறார்கள். பெரிய பள்ளிக் கூடங்களில் படித்து வருபவர்களும், பெற்றோர்களில் இருந்து படித்து வரும் மாணவர்களும் ஒரே இடத்தில் தேர்வுக்கு போட்டி போடுவது என்பது சாத்தியமான ஒன்றா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசும் மாநில அரசும் கல்வியில் மாறி மாறி போட்டி போட்டுக் கொள்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளத்த அவர், இவர்கள் முதலில் சமச்சீர் கல்வி என்று ஒன்றை கொண்டு வந்தார்கள், அதற்கு பெயர் சமச்சீர் பாடத் திட்டம் சமச்சீர் கல்வி கிடையாது. கிராமங்களில் வைத்து இருக்கும் மாணவர்களின் புத்தகமும் நகர்ப்புற மாணவர்கள் வைத்து இருக்கும் புத்தகமும் ஒன்றுதான், ஆனால் கல்வி அங்கு சமச்சீராக இல்லை. நகர்ப்புறங்களில் படிப்பவனுக்கு குளிரூட்டப்பட்ட அறை, கழிப்பட வசதி விளையாட்டு திடல் போன்றவைகள் எல்லாம் மேல் திட்டில் உள்ளது. ஆனால் கிராமப்புறத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த வசதிகள் எல்லாம் இருக்கிறதா?. சிற்றூர்களில் எல்லாம் மூன்றாம் தர ஆசிரியர்களை தான் பணி நியமனமே செய்கிறீர்கள். முதல் தர ஆசிரியர்களை நகர்ப்புற பள்ளிக்கூடங்களில் பணியமர்த்துகிறீர்கள். அவர்களெல்லாம் தனியார் பள்ளியை நோக்கி சொல்கிறார்கள் காரணம் அங்கு அவர்களுக்கு சம்பளமும் அதிகம் வசதியும் அதிகம்.

சமகல்விக்காகத் தான், இந்த புதிய கல்விக் கொள்கை என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய சீமான், இந்த கல்வி முறையில் அதிகபட்சம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் போய் பணி செய்வதை தவிர வேறு என்ன இருக்கிறது. ஒரு மாணவனின் கனவு, வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்பதில் இருக்கிறதே தவிர, இங்கு இந்த நாட்டில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி எல்லாம் கனவு இல்லை. ஆனால் மற்ற உலக நாடுகளில், எந்த நாடு இந்திய கனவை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யாவில் படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்திய நாட்டு கனவு இருக்கிறதா? ஆனால் இந்த நாட்டில் படிக்கும் அனைவருக்குமே அயல் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதுதான் இங்கு கல்வியின் இலக்காகவும் கற்பிக்கப்படுகிறது. அதைத் தான் அவர்கள் சமகல்வி சமச்சீர் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அறிவார்ந்த மருத்துவர் பொறியாளர் என அனைவரையும் தயார் செய்து வேறு நாட்டில் இறக்கிவிட்டு விடுகிறீர்கள். சிறந்த மருத்துவம் அமெரிக்காவிற்கு சென்று பார்க்கப்படுகிறது.. ஆனால் நம் நாட்டில் இருந்து சிறந்த மருத்துவத்திற்காக முதல்வரோ பிரதமரோ, லண்டனுக்கு செல்கிறார்கள்.

விளையாட்டு வீரர் யுவராஜுக்கு புற்றுநோய் இருந்தது, இந்திரா காந்தி அம்மையாருக்கு புற்றுநோய் இருந்தது இவர்கள் எல்லாம் வெளியூருக்கு சென்று வைத்தியம் பார்த்து வந்துவிட்டார்கள். ஆனால் இங்கு என் தாய்க்கு புற்றுநோய் என்றால் நான் எங்கு சென்று வைத்தியம் பார்க்க முடியும். வசதி இருக்கிறவன் பெரிய மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும், வசதி இல்லாத ஊர் புறம் இருக்கக் கூடியவர்கள் பாடகட்டி சுடுகாட்டில் தான் படுத்துக்கொள்ள முடியும்.

வேலுமணியின் இல்ல வரவேற்பு விழாவுக்கு செல்கிறீர்கள் இது அரசியல் ரீதியாக ஏதாவது தாக்கத்தை உண்டாக்குமா?

நான் ஒரு பண்பாட்டு ரீதியாக ஒரு குடும்ப நிகழ்வுக்கு செல்கிறேன் இது அரசியல் பேசுவதற்கான இடம் கிடையாது. அரசியல் என்பது கொள்கை கோட்பாடு போன்றவை எல்லாம் மாறலாம். ஆனால் மனித உறவு மாறாது. உறவிற்காக நான் விழாவிற்கு செல்கிறேன்.

கூட்டணி குறித்து பேசிய சீமான், எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன், இந்த நாட்டு மக்களுக்கு ஒரு நோய் இருக்கிறது. கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்கிறீர்கள், கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை. கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா? என்று கூறினார்.

கட்சியில் இருந்து விலகியவர்கள் குறித்த கேள்விக்கு, கட்சியில் இருந்து வெளியேறி விட்டீர்கள் அல்லவா, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் கூட்டணி அமைத்து வென்று கொள்ளலாம். என்னுடைய கட்சியில் முழு சுதந்திரம் உள்ளது. யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம். சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது, அதேபோல எங்கு இருந்து சென்று சாதித்தவர்கள் யார் என்ற கூறுங்கள், அவர்கள் யார் என்று கூறுங்கள் நான் இப்பொழுது கூட்டணி வைத்துக் கொள்கிறேன்.

தொகுதி சீரமைப்பு, தொடங்கும் பொழுதே நான் எதிர்த்து பேசி விட்டேன். அனைத்து கட்சி கூட்டம் போட்டு பேச வேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. அதிக எம்பிக்கள் தி.மு.க வில் இருக்கிறார்கள், அப்படியானால் அவர்கள் தான் தர்க்கம் பண்ணி தீர்த்துக் கொள்ள வேண்டும், இங்கு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி எந்த பிரயோஜனமும் இல்லை. மறுசீரமைப்பு என்பதில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்னவென்றால், 30 போடி மக்கள் இருக்கும் போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், 150 கோடி மக்கள் தொகை தொட்ட பிறகு மக்களின் பிரதிநிதிக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும், ஆனால் அது இல்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

ஆறு சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்ற இன்று இருப்பதை மாற்றி, மூன்று சட்டமன்றங்களுக்கு ஒரு நாடாளுமன்றம் என்று கொண்டு வரும் போது உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை நிலைப்பாடு, இதைத்தான் நாம் தமிழர் கட்சி முன்மொழிகிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆறு தொகுதியை சுற்றி பார்த்து என்ன வேலையை செய்வார். தேர்தல் வரும்போது பிரச்சனைகளை கேட்க போகிறோம், என்று கூறும்போது பிரச்சனையே நீங்கள் தான் என்று மக்கள் கூறுவார்கள். நாங்கள் மூன்று சட்டமன்றத்திற்கு ஒரு நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என்பதைத் தான் தீர்க்கமாக நினைக்கிறோம்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நடத்திய இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, எனக்கு நிறைய உறவுக்காரர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கிறார்கள். நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது. நான் மக்களின் உரிமைக்கானவன். இதுபோன்று செய்வது விஜய்க்கு பிடித்து இருக்கிறது அதனால் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. நாட்டிற்கு மக்களுக்கும் இதனால் என்ன பிரச்சனை? ஒன்றும் இல்லையே அதனால் அதைப் பற்றி பேச தேவை இல்லை என்றார்.

நடிகர் விஜய்யை அண்ணா என்று அழைக்கிறார்களே என்ற கேள்விக்கு, எங்கள் கட்சியை எடுத்துக் கொண்டால் எங்களின் தலைவர் சிறியவர் பெரியவர் என பாராமல் அனைவரையும் தம்பி என அழைப்பார். இது போன்றவை எல்லாம் அன்பின் மிகுதியால் வரக்கூடிய சொல். இதற்கு வயசு எல்லாம் தேவையில்லை. ஜெயலலிதா போன்றவர்களை அடி மனதில் இருந்து அம்மா என்று அழைத்தார்கள். அவர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களை செல்வி என்று தான் அழைத்தார்கள், ஒரு காலகட்டத்தில் வயதாகும் பொழுது அவர்களை அம்மா என்று அழைக்க தொடங்கினார்கள். அதேபோல என்னை அப்பா என்று அழையுங்கள் தாத்தா என்று அழையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை.

சீமான் ஆகிய எனக்கு ஞானத்தை போதித்த ஒவ்வொருவரும் அப்பா தான். முருகன் என என்னை பெற்றவரா? அப்பா முருகா ஞானபண்டிதன் என்று அழைக்கிறோம் அல்லவா... அதெல்லாம் பாசத்தில் பக்தியினுடைய வெளிப்பாடாக எடுத்துக் கொள்வோம்..அதுபோலத்தான் இதுவும். மீனவர்களுக்காக தொடர் கைதை தடுக்க வேண்டும் என்று 22ஆம் தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை வைத்து இருக்கிறோம். அதற்கு ஆதரவாக வலிமையான ஒரு குரல் வரும்போது அதை நாங்கள் ஆதரிக்க தான் செய்வோம். ஏற்றுக்கொள்வோம் என்று கூறினார்.

மீனவர்களுக்கான உரிமை இங்கு இந்த இரண்டு கட்சிகள் இருக்கும் வரை கிடைக்காது, அதேபோல மேல் இருக்கும் காங்கிரஸ்க்கோ பாரதிய ஜனதாவுக்கோ தமிழ்நாட்டைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. வாக்கு வரி இந்த நிலத்தின் வளமாகியவை மீது தான் பாரதிய ஜனதாவுக்கு, காங்கிரசுக்கு குறிக்கோளாக உள்ளது. அதேபோல இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் வாக்குக்கு காசு கொடுத்து மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சியில் அமர வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ளனர். மக்களினுடைய வாழ்வு நலம் எதிர்காலம் பாதுகாப்பு பற்றி எந்த கவலையும் இல்லை.

40 உறுப்பினர்களை வைத்து இருக்கக் கூடியவர்கள் இந்த மீனவர்கள் கைதை கண்டித்து பேசக்கூட இல்லை. எல்லை தாண்டி வருகிறார்கள் என்பதையே காரணமாக இலங்கை அரசு கூறுகிறது. கேரள மீனவர்கள் எல்லை தாண்டி வருகிறார்கள் என்ற கேள்வியை முன் வைத்தால் அதற்கு பதிலே வருவது இல்லை. எல்லை தாண்டி போகும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை. குஜராத்தில் ஒரு மீனவனை பாகிஸ்தான் கடற்படை ராணுவம் கைது செய்து விட்டது, என்றவுடன் இந்திய ராணுவம் வேகமாக சென்று தடுத்து நிறுத்தி மீட்டுக் கொண்டு வந்தது. அது போன்ற ஒரு செயல் எங்கள் மீனவர்கள் கைது செய்யப்படும் போது நடந்ததா? சாகுபவன் தமிழன் என்றால் சகித்துக் கொள்ளலாம் என்பது தான் அவர்களின் நிலைப்பாடு.

இன்று நடக்கக் கூடிய கலந்தாய்வில் தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வு செய்யப்படுகிறது, எங்களுடைய பலம் பலவீனம் என்பது பற்றி தெரியும், குறிப்பு குறித்து வேலையை சிறியதாக்கி கொண்டு வேலையை செய்வதற்கான கோட்பாடுகளை எடுத்துக் கொள்வோம் 2026 தேர்தலுக்காக ஓடிக் கொண்டே இருப்போம் என கூறினார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்

Read Entire Article