ARTICLE AD BOX
ஸ்கோப்ஜெ: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவின் தலைநகர் ஸ்கோப்ஜெவுக்கு கிழக்கே 100 கிமீ தூரத்தில் கோக்கானி என்ற இடம் உள்ளது. இங்குள்ள ஒரு கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் இரவு சிலர் வானவேடிக்கைகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கேளிக்கை விடுதியின் மேற்கூரையில் தீப்பற்றி விடுதியின் அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 51 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
The post மாசிடோனியாவில் பயங்கரம் கேளிக்கை விடுதியில் தீ: 51 பேர் பலி appeared first on Dinakaran.