டிரம்ப் ஆட்சியில் முதல் பலியாடு..?! திவாலான ஃபோர்எவர் 21 நிறுவனம்.. 350 கடைகள் மூடல்..!!

3 hours ago
ARTICLE AD BOX
  World

டிரம்ப் ஆட்சியில் முதல் பலியாடு..?! திவாலான ஃபோர்எவர் 21 நிறுவனம்.. 350 கடைகள் மூடல்..!!

World

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகள் வெளியாகி வரும் வேளையில், அந்நாட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய பணிநீக்கம், வர்த்தக பிரிவுகள் மூடல் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதேவேளையில் கடந்த சில வருடங்களாக வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிறுவனங்கள் தற்போது திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஃபேஷன் ரீடைல் விற்பனை நிறுவனமான ஃபோர்எவர் 21, F21OpCo என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், நிதி நெருக்கடியைச் சந்தித்து திவாலான நிறுவனமான அறிவிக்கும் செயல்முறையை துவங்கியுள்ளது.

டிரம்ப் ஆட்சியில் முதல் பலியாடு..?! திவாலான ஃபோர்எவர் 21 நிறுவனம்.. 350 கடைகள் மூடல்..!!

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்க வேண்டும் என்றால் முறையாக Chapter 11 சட்டப்பிரிவின் கீழ் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் ஃபோர்எவர் 21 பிராண்ட் திவாலான நிறுவனமாக அறிவித்து Chapter 11 விண்ணப்பித்தை சமர்ப்பித்துள்ளது. இது முதல் முறையா என்றால் இல்லை ஆறு ஆண்டுகளில் முன்பு ஒரு முறை இந்த Chapter 11 விண்ணப்பித்தை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாகவே பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் ரீடைல் விற்பனை சந்தை பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டு மக்கள் அடிப்படை தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் தங்களுடைய செலவு முறையை மாற்றியுள்ளனர். இந்த சூழ்நிலையில் பல நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்து லாபத்தை தக்கவைப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இதில் ஒன்று தான் ஃபோர்எவர் 21 பிராண்டை நிர்வாகம் செய்யும் F21OpCo என்ற நிறுவனம்.

ஃபோர்எவர் 21 பிராண்டின் விற்பனை அளவுக்கு தொடர்ந்து குறைந்து வருவதால், இந்நிறுவனம் தனது கடைகளை முடிவிட்டு மொத்த வர்த்தகத்தையும் விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.

ஃபோர்எவர் 21 நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் துறையில் போட்டிப்போட முடியாமல் மாட்டிக்கொண்டது. வலுவான டிஜிட்டல் வர்த்தகம் இல்லாத பிராண்டுகளுக்கு சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது. இன்றைய போட்டி மிகுந்த துறையில் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிதாக நுழைவது என்பது சற்று கடினம். இதேவேளையில் இதற்கு அதிகப்படியான செலவுகளை செய்ய வேண்டும், இதற்கான தொகையும் ஃபோர்எவர் 21 நிறுவனத்திடம் இல்லை. இதற்கு ஓரே தீர்வு நிறுவனத்தை மூடிவது தான்.

இதேவேளையில் ஃபோர்எவர் 21 நிறுவனத்தின் கடைகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவது தான் தற்போது முக்கிய பிரச்சனை. இதனால் கடைகளை மூடிவிட்டு மொத்தமாக வர்த்தகத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த 6 வருடத்தில் 2வது முறையாக திவால் நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.

மேலும், ஃபோர்எவர் 21 நிறுவனத்தின் சொத்துக்களையும் விற்பனை செய்ய நீதிமன்றத்தின் மேற்பார்வையின் செயல்படுத்த இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. F21OpCo நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிராட் செல் (Brad Sell), நிறுவனத்தின் 350 அமெரிக்க கடைகளை விற்க முடியாமல் தோல்வியடைந்த பிறகு திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஷீன் மற்றும் டெமு போன்ற சர்வதேச ஃபாஸ்ட்-ஃபேஷன் நிறுவனங்களின் கடுமையான போட்டி தான் ஃபோர்எவர் 21 நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த போட்டியின் காரணமாக ஃபோர்எவர் 21 பிராண்டின் சந்தைப் பங்கை கணிசமாக பாதித்துள்ளது என்றும் விளக்கம் கொடுத்தார்.

ஃபோர்எவர் 21 நிறுவனத்தின் சொத்துக்கள் 100 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டாலும், டெலாவேர் மாவட்டத்தில் உள்ள திவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி இந்நிறுவனத்திடம் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது.

Read Entire Article