மாங்காய் இஞ்சியில் உள்ள 6 மருத்துவ குணங்கள்!

8 hours ago
ARTICLE AD BOX

மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான மசாலா பொருள் ஆகும். இது பார்ப்பதற்கு இஞ்சியைப் போன்று இருக்கும். இதை மாங்காய் இஞ்சி என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் மாம்பழத்தின் சுவை போன்று இருக்கும். இது மஞ்சள் உடன் நெருங்கிய தொடர்புடையது.

பெரும்பாலும் குஜராத், மேற்குவங்கம்,கேரளா, உத்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல வட கிழக்கு மாநிலங்களில் இந்த இஞ்சி பயிரிடப்படுகிறது.

இந்த மாங்காய் இஞ்சியை ஆயுர்வேதத்தில் நிறைய வழிகளில் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல், தோல், வியாதிகள், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது. இந்த இஞ்சியை ஊறுகாய், சட்னி மற்றும் சாஸ்களில் பயன்படுத்தலாம்.

இதில் ஆண்டி ஆக்சிடென்ட் அலர்ஜி எதிர்ப்பு தன்மை, டையுரிடித்தன்மை, மலமிளக்கி தன்மை, போன்றவை காணப்படுகிறது.

இந்த இஞ்சியில் வேதியல் பொருட்கள் ஸ்டார்ச், பைபர்ஸ், பினோலிக் அமிலங்கள் எண்ணெய்கள் குர்க்கு மீனால்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளன. இந்த மாங்காய் நறுமணத்திற்கு அதிலுள்ள சேர்மங்கள்தான் காரணம். பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. புதிய மற்றும் உலர்ந்த இஞ்சிச்சாறில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பைட்டோ கெமிக்கல்கள் உள்ளது.

பசியை தூண்டும்:

மாங்காய் இஞ்சியில் குர்க்கு மின் டெமெத்தாக்ஸி குர்குமின் டெஸ் - மெத்தாக்ஸி குர்மின் மற்றும் டெஸ் மெத்தாக்ளி குர்குமின் போன்றவை இருப்பதால் இது பசியை தூண்ட உதவுகிறது. இதை சமையலில் சேர்த்து வந்தால் நல்ல பசி உணர்வை தூண்டும்.

மனச்சோர்வை போக்கும்:

மாங்காய் இஞ்சியில் ஆன்ட்டி டிரஸ்ஸைன் பண்புகள் காணப்படுகிறது. இதில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் உள்ளது. கார்பனேட்டிவ் பண்புகள் நிறைய இதில் காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். கவலை, மனநிலை மாற்றங்கள், மற்றும் தலைவலி, மனச்சோர்வு போன்ற அறிகுறிகளிலிருந்து விடுபட உதவுகிறது. இதன் வாசனை மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.

புற்றுநோய் கட்டிகளை தடுக்கும்:

மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும். ஹீமோ தெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்ந்து இதை உணவில் பயன்படுத்தி வரலாம். மாங்காய் இஞ்சியல் ஆக்ஸினேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

காய்ச்சலை குறைக்கும்:

மாங்காய் இஞ்சியில் ப்ளோவனாய்டுகள் உள்ளன. இதில் ஆன்டி பைரியாடிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. உடம்பில் உள்ள அதிகப்படியான சூட்டை குறைக்க உதவுகிறது. காய்ச்சலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனை உணவில் சேர்ப்பதால் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க பயன்படுகிறது.

உடல் பருமனை குறைக்கிறது:

நீரிழிவு இதய நோய் போன்ற வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு உடல் பருமன் மிக முக்கிய காரணம். மாங்காய் இஞ்சியில் குர்குமின் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இதில் உள்ள குர்க்குமின், தசை செல்கள் மற்றும் கணைய உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு உடல் பருமனுடன் தொடர்புடைய அலர்ஜியை ஒடுக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
இதய நோயாளிகளின் உயிரை காக்கும் அதிநவீன செயற்கை இதயம்!
Mango Ginger

மலச்சிக்கலை தடுக்கும்:

மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த மலமிளக்கியாகும். இதில் நார்ச்சத்து மற்றும் மாவு சத்து நிறைந்த மூலங்கள் உள்ளதால், மலம் கழிப்பதை எளிதாகிறது. மாங்காய் இஞ்சி ஒரு டையூரிடிக் என்பதால் மலத்தில் தண்ணீர் சத்தை அதிகரித்து, மலச்சிக்கலை எளிதாக்கும்.

மேலும் வயிற்று வலி, அஜீரணம், மோசமான செரிமானம், அமிலப்பிரச்னைகள், வாயு போன்றவற்றை போக்க உதவுகிறது. பித்த நீர் உற்பத்தியை தந்து ஜீரணிக்க உதவி செய்கிறது. இதில் உள்ள அஸ்ட்ரி ஜெண்ட் சருமத்திற்கு குளிர்ச்சி தந்து, சரும அழற்சி, எரிச்சல், வடுக்கள் போன்ற சருமப் பிரச்சனைகள் உண்டாகாமல் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
ஓமம்: ஆரோக்கியத்தின் பொக்கிஷம்!
Mango Ginger
Read Entire Article