ARTICLE AD BOX
மறைந்த நடிகர் ரகுவரனின் ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புகளைக் கொண்ட நடிகர்களில் ரசிகர்களுக்கு மிக நெருக்கமானவாராக இருந்தவர் நடிகர் ரகுவரன்.
வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தான் நடித்த படங்களின் கதைகளுக்கு உறுதியான நடிப்பைக் கொடுத்தவர். முக்கியமாக, புரியாத புதிர் படத்தில் ரகுவரன் பேசிய, ‘ஐ நோ.. ஐ நோ.. (I know.. i know) என்கிற வசனம் இன்றும் பலராலும் நினைவு கூறப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இதையும் படிக்க: அப்பா இறந்தபோது... ரசிகர்களால் வேதனையடைந்த பிருத்விராஜ்!
ரெட், சிவப்பதிகாரம், பாட்ஷா, முதல்வன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்கள் ரகுவரன் திரைப்பயணத்தில் முக்கிய பங்கை வகித்திருக்கின்றன.
நல்ல நடிகர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கைப் பார்வைகளிலும் ரகுவரனின் பேச்சுகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் ரகுவரின் திரைப்பயணம் மற்றும் வாழ்க்கைக் குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இதனை ஹாசிப் அபினா ஹகீப் என்பவர் இயக்கியுள்ளார்.
விரைவில், இந்த ஆவணப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் முதல் போஸ்டரை ரகுவரனின் மனைவி நடிகை ரோகிணி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.