மறுவெளியீடாகும் ஆயிரத்தில் ஒருவன்!

2 days ago
ARTICLE AD BOX

நடிகர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். 2010-ல் இப்படம் வெளியானபோது கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

அதேநேரம், இப்படம் தெலுங்கில் ‘யுகனிக்கி ஒக்கடு’ என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிக்க: ரம்யா - தொடரும் ஆதிக் ரவிச்சந்திரன் சென்டிமெண்ட்!

ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இன்றும் ஆண்டிற்கு ஒருமுறை இப்படம் மறுவெளியீடு காண்கிறது.

இந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் மறுவெளியீடு காண்கிறது. ஆந்திரம், தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தை மறுவெளியீடு செய்ய முடிவு செய்துள்ளனராம்.

Read Entire Article