மருத்துவத் துறை வேலை வாய்ப்பு; 48 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

11 hours ago
ARTICLE AD BOX

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 60,000 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

Multi Purpose Health Worker (Health Inspector - Grade II) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi purpose Health worker (male) / Health Inspector / Sanitary Inspector course training படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 14,000

Hospital Worker / Support Staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 8,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயற் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், திருநெல்வேலி

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Read Entire Article