ARTICLE AD BOX
ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட உள்ள இஷான் கிஷன், அந்த அணிக்கு இடையில் நடந்த பயிற்சி போட்டி ஒன்றில் 23 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து மிரள வைத்துள்ளார். ஏற்கனவே. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் என இரண்டு துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் எனும் நிலையில், மூன்றாவதாக இஷான் கிஷனும் இணைந்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பயிற்சிப் போட்டியில் அபிஷேக் ஷர்மாவை விட அதிக பந்துகளை சந்தித்து அதிக ரன்களை அதிரடியாக சேர்த்து இருக்கிறார் இஷான் கிஷன். பயிற்சி போட்டியில் அபிஷேக் ஷர்மா 8 பந்துகளில் 28 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

ஆனால், இஷான் கிஷன் 23 பந்துகள் வரை களத்தில் நின்று 64 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் இணைந்து 2.2 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்து மிரள வைத்தனர். ஆனால், இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசையில் இடம் கிடைப்பது கடினமான ஒன்றாக உள்ளது.
தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா துவக்க வீரர்களாக இறங்க உள்ளனர். அவர்களை மாற்றுவது நடக்காத விஷயம். ஏனெனில், அவர்கள் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி துவக்கம் அளித்து சன்ரைசர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன் வரை செல்ல முக்கிய காரணமாக இருந்தனர்.
நான்காம் வரிசையில் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ஆன தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாஸன் களம் இறங்குவார். ஐந்தாம் வரிசையில் நிதிஷ்குமார் ரெட்டி களம் இறங்குவார். இஷான் கிஷன் ஆறாம் வரிசையில் இறங்கினால் அதனால் எந்த பலனும் இல்லை.
எனவே, இஷான் கிஷன் மூன்றாம் வரிசையில் தான் பேட்டிங் செய்தாக வேண்டும். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களுமே விக்கெட் பற்றி யோசிக்காமல் அதிரடியாக ரன் குவிப்பவர்களாக இருந்தால், அதனால் சில போட்டிகளில் அவர்கள் விரைவாக நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளை இழந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.
எனவே, மூன்றாம் வரிசையில் நிலையாக நின்று விக்கெட்டை ரொட்டேட் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் தேவை. அந்த இடத்துக்கு அபினவ் மனோகர் அல்லது அதர்வா டைடே களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே. இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? என்ற கேள்வியும் உள்ளது.
IPL 2025: நம்பவைச்சு.. மயங்க் யாதவை கழட்டி விட மெகா பிளான்? ஆடிப் போன பிசிசிஐ.. என்ன நடந்தது?
தற்போது இஷான் கிஷன் அந்த அணியின் பயிற்சி போட்டியில் அபாரமாக ரன் குவித்திருப்பதால், அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கப்படுவார்? என்ற கேள்வி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.