மயிலாடுதுறை | மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; கண்ணை சிதைந்த கொடூரம்!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
25 Feb 2025, 5:33 am

சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினரான 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயது குழந்தை வழக்கம்போல அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றுள்ளது. பிறகு மாலையில் குழந்தை வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதே வழியில் வந்துள்ளார் சிறுமியின் உறவினரான 16 வயது சிறுவன்.

சிறுமிக்கு சாக்லேட் வாங்கிகொடுத்த சிறுவன் , அருகிலிருந்த புதருக்குள் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்துகொண்ட சிறுமி சத்தமிட ஆரம்பித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவன் அருகிலிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால், சிறுமியின் கண் சிதைந்துள்ளதுள்ளது.

வெகுநேரமாக குழந்தையை காணவில்லை என குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் குழந்தையை தேட துவங்கியுள்ளனர். வெகுநேரம் தேடிய பின்னர் அங்கன்வாடிக்கு பின்புறம் உள்ள புதர் பகுதியில் குழந்தை தலையில் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சீர்காழி
புதுக்கோட்டை| எலி கொல்லி ஸ்ப்ரே அடித்து விளையாடியதால் விபரீதம் - சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை

குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் குற்ற செயலில் ஈடுபட்ட குழந்தையின் உறவினரான 16 வயது சிறுவனை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க கொண்டு சென்றனர்.

Read Entire Article