ARTICLE AD BOX
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா. இவரும், சுனிதா அஹுஜாவும் மார்ச் 1987இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஜூம் டிவியின் கூற்றுப்படி, கோவிந்தாவும் சுனிதாவும் 37 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து செல்வதாகவும், அவர்களின் விவாகரத்து இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கோவிந்தாவும் சுனிதாவும் பிரிவதற்கு ஒரு மராத்தி நடிகையே காரணம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், கோவிந்தா அல்லது சுனிதா தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா சமீபத்தில் அளித்த சில நேர்காணலில், அவர் தனது கணவருடன் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றும் பல ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வுகளும், மன அழுத்தமும் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், தனது திருமண வாழ்க்கையில் பல கடினமான காலங்களைச் சந்தித்ததாகவும், பல விஷயங்களைத் தாங்கிக் கொண்டதாகவும் சுனிதா வெளிப்படுத்தியிருந்தார்.